“கொரோனா தடுப்பூசிகளில் பின்விளைவுகள் இல்லை” – ராதாகிருஷ்ணன் பேட்டி!

“கொரோனா தடுப்பூசிகளில் பின்விளைவுகள் இல்லை” – ராதாகிருஷ்ணன் பேட்டி!

கொரோனா தடுப்பூசி அனைத்து மாவட்டத்திற்கும் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“கொரோனா தடுப்பூசிகளில் பின்விளைவுகள் இல்லை” – ராதாகிருஷ்ணன் பேட்டி!

தமிழகத்தில் நாளைமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தமிழகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்ட சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு 5.36 லட்சமும் , பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் 20 ஆயிரமும் அதில் அடங்கும். முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படவுள்ளது.

“கொரோனா தடுப்பூசிகளில் பின்விளைவுகள் இல்லை” – ராதாகிருஷ்ணன் பேட்டி!

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தடுப்பூசியை விஞ்ஞான ரீதியாக அணுக வேண்டும்; தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது; தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். கொரோனா தடுப்பூசி அனைத்து மாவட்டத்திற்கும் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது” என்றார்.

“கொரோனா தடுப்பூசிகளில் பின்விளைவுகள் இல்லை” – ராதாகிருஷ்ணன் பேட்டி!

முன்னதாக கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது என்றும் 2வது டோஸ் போடும் வரையிலும் 28 நாட்களுக்கு மது அருந்த கூடாது எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.