தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி : முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

 

தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி : முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

ஆக்சிஜன் தடுப்பூசிகள் உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 33,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,63,129 ஆக அதிகரித்துள்ளது.இருப்பினும் தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பு பொருட்களை மத்திய அரசு தொடர்ந்து அளித்து வருகிறது.அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை மூலமாக தேவையான ஆக்சிஜன் தயாரிக்கப்பட்ட நிலையில், இயந்திர பழுது காரணமாக உற்பத்தி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி : முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

இந்நிலையில் ஆக்சிஜன், தடுப்பூசிகள் உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தமிழகத்திலேயே உற்பத்தி நிலையங்களை தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவம் , உயர் தொழில்நுட்ப சாதனங்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் தமிழகத்திலேயே உருவாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் தேவையான உதவிகளை வழங்கும் என்றும் தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார்.கொரோனா மருந்து, கூட்டு தொழிற்கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். குறைந்தபட்சம் 50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களின் விருப்பக் கருத்துக்களைப் கோரியுள்ளது டிட்கோ நிறுவனம். மே 31-ஆம் தேதிக்குள் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விருப்ப கருத்துக்கள் பெறப்படும். விருப்பு கருத்துக்களை ஆய்வு செய்து உற்பத்தி கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.