நடிகர் விவேக் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமா?… மருத்துவமனை விளக்கம்!

 

நடிகர் விவேக் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமா?… மருத்துவமனை விளக்கம்!

நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை ஷூட்டிங் ஒன்றை முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது இதய துடிப்பு குறைவாக இருந்ததாக தெரிகிறது.

நடிகர் விவேக் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமா?… மருத்துவமனை விளக்கம்!

மக்கள் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்ட விவேக், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட விவேக்கிற்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தடுப்பூசிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விவேக்கிற்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்த மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிடுவோம் என கூறியிருந்தது. அதன் படி, தற்போது விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

நடிகர் விவேக் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமா?… மருத்துவமனை விளக்கம்!

அதில், முற்பகல் 11 மணிக்கு சுய நினைவின்றி மருத்துவமனைக்கு விவேக் கொண்டு வரப்பட்டார். விவேக்கிற்கு ரத்த நாளத்தில் பிளாக் இருந்தது. அதை ஆஞ்சியோ செய்து சரி செய்தார்கள். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை 24 மணி நேரம் ஐ.சி.யூவில் வைத்த பிறகு தான் மறுபரிசீலனை செய்ய உள்ளோம். இது சாதாரண கார்டியாக் அர்ரெஸ்ட் தான். இதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி ஏதும் மில்லை என தெரிவித்தார்.