தடுப்பூசி திருவிழா… ஆர்வம் காட்டாத தமிழக மக்கள்!

 

தடுப்பூசி திருவிழா… ஆர்வம் காட்டாத தமிழக மக்கள்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவிக் கொண்டிருப்பதால், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். அதன் படி, தமிழகத்தில் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என அரசு அறிவித்தது. அந்நாட்களில் நாளொன்றுக்கு 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தடுப்பூசி திருவிழா… ஆர்வம் காட்டாத தமிழக மக்கள்!

அதன் படி நேற்று அரசு மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட பல இடங்களில் தடுப்பூசிகள் செலுத்துக் பணி தொடங்கின. தடுப்பூசி திருவிழாக்களுக்காக பிரத்யேகமாக தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே போடப்பட்டு வரும் இடங்களில், கூடுதலாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தடுப்பூசி திருவிழா தொடக்கத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் குவிந்தனர். ஆனால், சில மணி நேரங்களுக்கு பிறகு மக்கள் படையெடுப்பு குறைந்துவிட்டது.

தடுப்பூசி திருவிழா… ஆர்வம் காட்டாத தமிழக மக்கள்!

இந்த நிலையில், தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று 75 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 75 ஆயிரம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டது சுகாதாரத்துறையினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இன்றும் அவ்வளவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை. தடுப்பூசிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளே இதற்கு காரணமென சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.