சென்னையில் தடுப்பூசி ஆட்டோ : சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!

 

சென்னையில் தடுப்பூசி ஆட்டோ : சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 5,755 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24லட்சத்து 55ஆயிரத்து 332ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 150 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 51ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரேநாளில் 372 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு 530789 ஆகவும், இதுவரை 8131 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் தடுப்பூசி ஆட்டோ : சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!

சென்னையில் இன்று அதிகபட்சமாக அடையாறில் 401 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தேனாம்பேட்டையில் 377, அண்ணாநகரில் 340, கோடம்பாக்கத்தில் 358 ,அம்பத்தூரில் 246 ,தண்டையார்பேட்டையில் 301, திருவிக நகரில் 303 ,ராயபுரத்தில் 259 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் தடுப்பூசி ஆட்டோ : சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!

இந்நிலையில் கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தடுப்பூசி ஆட்டோ ஒன்று சென்னை மாநகராட்சி சார்பில் இயங்கி வருகிறது.