“இந்தியாவில் கொரோனாவை ஒழிக்க இது ஒன்னு தான் தீர்வு?” – ஐடியா சொல்லும் புகழ்பெற்ற அமெரிக்க நிபுணர்!

“இந்தியாவில் கொரோனாவை ஒழிக்க இது ஒன்னு தான் தீர்வு?” – ஐடியா சொல்லும் புகழ்பெற்ற அமெரிக்க நிபுணர்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டிச் சென்றது. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டிருப்பது பரவலை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கிறது என்று தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

“இந்தியாவில் கொரோனாவை ஒழிக்க இது ஒன்னு தான் தீர்வு?” – ஐடியா சொல்லும் புகழ்பெற்ற அமெரிக்க நிபுணர்!

முழு ஊரடங்கு ஒரு தற்காலிக தீர்வு தான். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதே நிரந்தர தீர்வைக் கொடுக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற தொற்றுநோய் நிபுணரும் அதிபரின் மருத்துவ ஆலோசகருமான அந்தோணி ஃபாஸி கூறியிருக்கிறார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், “இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே தீர்வு.

“இந்தியாவில் கொரோனாவை ஒழிக்க இது ஒன்னு தான் தீர்வு?” – ஐடியா சொல்லும் புகழ்பெற்ற அமெரிக்க நிபுணர்!

உலகிலேயே அதிகமான தடுப்பூசி தயாரிக்கும் நாடு இந்தியாதான். இந்தியாவில் ஏராளமான வளங்கள் இருக்கின்றன. அதைக் கொண்டு தடுப்பூசி உற்பத்தியை விரைவுப்படுத்த வேண்டும். வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும். அதேபோல ராணுவத்தைக் களமிறக்கி தற்காலிகமான மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு செயல்படுத்தும் பட்சத்தில் மக்களைத் தெருக்களிலும் ஆம்புலன்ஸுலும் அமர வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமிருக்காது” என்றார்.