இனிமேல் தடுப்பூசி போட்டால் தான் ஹோட்டலுக்கு போக முடியும் – அதிரடி உத்தரவு!

 

இனிமேல் தடுப்பூசி போட்டால் தான் ஹோட்டலுக்கு போக முடியும் – அதிரடி உத்தரவு!

குஜராத்தில் உணவகத்துக்கு செல்ல தடுப்பூசி கட்டாயம் என உத்தரவிடப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு இன்னும் ஓயவில்லை. நாள்தோறும் 30 ஆயிரம் என்கிற அளவில் பாதிப்புகள் பதிவாகிறது. நவம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் மூன்றாவது அலை உருவெடுக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மூன்றாவது அலைக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி விட வேண்டுமென மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாநில அரசுகளும் தடுப்பூசி முகாம்களை அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இனிமேல் தடுப்பூசி போட்டால் தான் ஹோட்டலுக்கு போக முடியும் – அதிரடி உத்தரவு!

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையிலும் இன்னும் சில மக்கள் மத்தியில் தயக்கம் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை. கோவிலுக்குள் வர தடுப்பூசி கட்டாயம், விமானத்தில் பயணிக்க தடுப்பூசி கட்டாயம் என திரும்பும் பக்கமெல்லாம் தடுப்பூசி போட்டால் தான் அனுமதி வழங்கப்படும் என மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

இந்த நிலையில், குஜராத்தில் ஹோட்டலுக்கு வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குஜராத் ஹோட்டல் மட்டும் ரெஸ்டாரன்ட் சங்க தலைவர் நரேந்திர சோமானி, கொரோனோ தடுப்பூசியின் முதல் தவணையாவது செலுத்திய வாடிக்கையாளர்களை மட்டுமே ரெஸ்டாரண்டில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். கொரனோ பரவலை தடுக்க உணவகங்களின் உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.