இந்தியாவில் 13.90 லட்சம் பேருக்கு தடுப்பூசி : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

இந்தியாவில் 13.90 லட்சம் பேருக்கு தடுப்பூசி : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

நாடு முழுவதிலும் 13,90,592 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் 13.90 லட்சம் பேருக்கு தடுப்பூசி : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமலுக்கு வந்தது. அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து 3,000 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், முன்களப்பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரு நாள் இடைவெளி விட்டு தடுப்பூசி செலுத்துமாறு மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டதன் படி, பெரு நகரங்களில் வாரத்திற்கு 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படுகிறது. அடுத்த 2 மாதத்திற்குள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 13.90 லட்சம் பேருக்கு தடுப்பூசி : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களுடன் சேர்த்து கொரோனா தடுப்பூசி விவரங்களையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 14,256 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 152 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாகவும் இதுவரை 10,300,838 பேர் குணமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,06,39,684 ஆக அதிகரித்துள்ளதாகவும் 1,85,662 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.