‘ஒரு நாள் இடைவெளிவிட்டு தடுப்பூசி’ : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

‘ஒரு நாள் இடைவெளிவிட்டு தடுப்பூசி’ : மத்திய  சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

மாநகரங்களில் வாரத்திற்கு 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி போடுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 16ம் தேதி, நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதல் நாளில் ‘கோவின்’ செயலின் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது அந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் வந்தால் போதும் என்ற அளவிற்கு நிலைமை மாறிவிட்டது போல் தெரிகிறது.

‘ஒரு நாள் இடைவெளிவிட்டு தடுப்பூசி’ : மத்திய  சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

கோவாக்சின் தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனை முடியாமலேயே, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. ஆனால், இது எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஒரு நாள் இடைவெளிவிட்டு தடுப்பூசி போடுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

‘ஒரு நாள் இடைவெளிவிட்டு தடுப்பூசி’ : மத்திய  சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

பெரிய மாநிலங்களில் வாரத்தில் 4 நாட்களுக்கு மேல் தடுப்பூசி போட வேண்டும் என்றும் சிறிய மாநிலங்களில் 4 நாட்களுக்கும், யூனியன் பிரதேசங்களில் 2 நாட்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் வாரம் 7 நாட்களும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.