காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்! – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்! – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஏழு ஆண்டுகளுக்கு தகுதிச் சான்றை ஆயுள் முழுக்க செல்லும்படியானதாக மாற்றி, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்! – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர விரும்புகிறவர்கள் அதற்கான தகுதித் தேர்வில் 60 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற சட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. 60 சதவிகித மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கூட ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பணி நியமனம் வழங்கப்படும். இந்த தேர்வில் தோல்வியடைந்தால் வெற்றி பெறும் வரை மீண்டும் எழுதலாம். இப்படி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு கூட அரசால் பணி வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால், தாங்கள் தேர்ச்சி பெற்றதை ஏழு ஆண்டுக்கு என்று இல்லாமல் ஆயுள் முழுக்க செல்லுபடியானதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்! – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற சுமார் ஒரு லட்சம் பேருக்கு இன்னும் பணி வழங்கப்படாத நிலையில், அவர்கள் பெற்ற 7 ஆண்டுகளுக்கான தகுதிச்சான்றிதழை ஆயுட்காலமாக மாற்றி தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

http://

பேராசிரியர் பணிக்கான SLET, NET போன்ற தகுதித் தேர்வுகளின் சான்றிதழ் ஆயுள் முழுமைக்கும் செல்லுபடியாவதைப் போல இதனையும் மாற்றி அமைத்திட வேண்டும்.
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்புவதுடன்,

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்! – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

அதில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும். அதுதான் அரசாங்கத்தை நம்பி படித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் செய்வதாக அமையும்” என்று கூறியுள்ளார்.