சமூக விலகல் விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ….. எப்.ஐ.ஆர். போட்ட உத்தரகாண்ட் போலீஸ்

சமூக விலகல் விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ….. எப்.ஐ.ஆர். போட்ட உத்தரகாண்ட் போலீஸ்

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இருப்பினும் தற்போது லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் வீட்டை வெளியே செல்லும் மாஸ்க் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சமூக விலகல் விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ….. எப்.ஐ.ஆர். போட்ட உத்தரகாண்ட் போலீஸ்

மத்தியில் ஆளும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களே லாக்டவுன் மற்றும் சமூக விலகல் விதிமுறைகளை மீறுவது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. தற்போது உத்தரகாண்ட் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜ்குமார் துக்ரலுக்கு எதிராக சமூக விலகல் விதிமுறைகளை மீறியதாக போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். ருத்ராபுரில் உள்ள தனது வீட்டில் வைத்து ராஜ்குமார் துக்ரல் அந்த பகுதி மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்களை வழங்கினார். இதனை பெறுவதற்காக அவரது வீட்டு பகுதியில் அதிகளவில் மக்கள் கூடினர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு ருத்ராபுர் கோட்வாலி காவல் நிலைய போலீசார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜ்குமார் துக்ரலுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

சமூக விலகல் விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ….. எப்.ஐ.ஆர். போட்ட உத்தரகாண்ட் போலீஸ்

கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி பா.ஜ.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோஜ் திவாரி அண்மையில் அரியானாவின் சோனிபட் அருகில் உள்ள ஷேக்புரா கிராமத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடினார். இந்த நிகழ்வில் லாக்டவுன் விதிமுறைகளை மட்டுமில்லாமல், சமூக விலகல் விதிமுறைகளையும் அவர் மீறியதாக குற்றச்சாட்டு விழுந்தது.