வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால் சிக்கல்… 3 லட்சம் பேரை தனிமைப்படுத்தும் அளவுக்கு வசதி இல்லை… கையை விரித்த உத்தரகாண்ட் அரசு

வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால் சிக்கல்… 3 லட்சம் பேரை தனிமைப்படுத்தும் அளவுக்கு வசதி இல்லை… கையை விரித்த உத்தரகாண்ட் அரசு

வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால் உத்தரகாண்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2 லட்சம் முதல் 3 லட்சம் பேரை தனிமைப்படுத்தும் அளவுக்கு அரசிடம் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க நாடு தழுவிய லாக்டவுனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. லாக்டவுனின் முதல் 40 நாட்களில் அனைத்து தொழில்துறைகளும் முடங்கியதால் பல கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்தனர். பிழைப்புகாக வெளிமாநிலங்களில் இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரததை இழந்ததால் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால் சிக்கல்… 3 லட்சம் பேரை தனிமைப்படுத்தும் அளவுக்கு வசதி இல்லை… கையை விரித்த உத்தரகாண்ட் அரசு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருவது அந்த மாநிலங்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளாமல் மாநிலத்துக்குள் அனுமதித்தால் அது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கு வழி செய்து விடும். அப்படித்தான் உத்தரகாண்ட் மாநிலம் சிக்கி கொண்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால் சிக்கல்… 3 லட்சம் பேரை தனிமைப்படுத்தும் அளவுக்கு வசதி இல்லை… கையை விரித்த உத்தரகாண்ட் அரசு

உத்தரகாண்ட் அமைச்சர் எஸ். யுனியல் இது குறித்து கூறுகையில், வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால், தெஹ்ரி, உத்தரகாசி, சாமோலி, அல்மோரோ மற்றும் பகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தள்ளது. 2 முதல் 3 லட்சம் மக்களை தனிமைப்படுத்த அடிப்படை கட்டமைப்பு அவசியம், ஆனால் தற்போது நம்மிடம் அந்த அளவுக்கு வசதி இல்லை என நம்புகிறேன் என தெரிவித்தார். உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்தர சிங் ராவத் மூத்த அரசு அதிகாரிகளிடம் பேசுகையில், தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.