தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. ஆனால் அரசியலிருந்து ஓய்வு பெற மாட்டேன்.. உத்தரகாண்ட் பா.ஜ.க. அமைச்சர் அறிவிப்பு

தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. ஆனால் அரசியலிருந்து ஓய்வு பெற மாட்டேன்.. உத்தரகாண்ட் பா.ஜ.க. அமைச்சர் அறிவிப்பு

2022ல் நடைபெற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அம்மாநில பா.ஜ.க. அமைச்சர் ஹரக் சிங் ராவத் அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பா.ஜ.க. அரசில் கேபினட் அமைச்சராக இருப்பவர் ஹரக் சிங் ராவத். வனத்துறை கவனித்து வரும் ஹரக் சிங் ராவத் அண்மையில் மாநில தொழிலாளர் நல வாரிய தலைவர் பதவியலிருந்து நீக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. ஆனால் அரசியலிருந்து ஓய்வு பெற மாட்டேன்.. உத்தரகாண்ட் பா.ஜ.க. அமைச்சர் அறிவிப்பு

இந்த சூழ்நிலையில் ஹரக் சிங் ராவத் 2022ம் ஆண்டில் நடைபெற உள்ள மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார். ஆனால் அரசியலிருந்து ஒய்வு பெற மாட்டேன் என தெளிவுப்படுத்தியுள்ளார். அதேசமயம் தொழிலாளர் நல வாரிய தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் ஹரக் சிங் ராவத் விளக்கம் கொடுத்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட மாட்டேன்.. ஆனால் அரசியலிருந்து ஓய்வு பெற மாட்டேன்.. உத்தரகாண்ட் பா.ஜ.க. அமைச்சர் அறிவிப்பு

ஹரக் சிங் ராவத் இது குறித்து கூறுகையில், எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சராக நீண்ட காலம் இருந்து வருகிறேன். ஆகையால் 2022 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. கட்சியின் தலைமையிடம் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என கோரிக்கை விடுக்க உள்ளேன். நான் அரசியலிருந்து ஓய்வு பெறவில்லை. கட்சி மற்றும் மாநிலத்துக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்தார்.