மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்?… எங்கே அந்த 65 உடல்கள்? – வெளியான அதிர்ச்சி தகவல்!

 

மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்?… எங்கே அந்த 65  உடல்கள்? – வெளியான அதிர்ச்சி தகவல்!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மகா கும்பமேளாவில் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். அதன் பிறகே அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. ஆனால் அரசு வெளியிடும் புள்ளி விவரங்களுக்கும், அங்கு நிகழக்கூடிய மரணங்களுக்கும் இடையே நிறைய முரண்பாடுகள் இருந்தன. இதன்மூலம் கொரோனாவால் ஏற்படும் மரணங்களை அரசும் தனியார் மருத்துவமனைகளும் மறைப்பதாக சந்தேகம் மக்கள் மத்தியில் எழ தொடங்கியது. எனவே கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து மேற்பார்வையிட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்?… எங்கே அந்த 65  உடல்கள்? – வெளியான அதிர்ச்சி தகவல்!

அந்த வகையில் ஹரித்வாரிலுள்ள பாபா பர்பானி எனும் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த கொரோனா இறப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் 15 நாட்களாக வெளியிடப்படாமல் இருந்துள்ளன. இதுதொடர்பாக அந்தக் குழு விசாரிக்கையில், ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை அம்மருத்துவமனையில் 65 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புள்ளிவிவரங்கள் மாநில அரசுக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கப்பட்டுள்ளது.

மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்?… எங்கே அந்த 65  உடல்கள்? – வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா விதிமுறைகளின்படி கொரோனா உயிரிழப்புகள் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் 24 மணி நேரத்திற்குள் கோவிட் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். அப்படி தகவல் கொடுக்கவில்லை என்றால் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. ஆனால் 15 நாட்களாக ஏன் பாபா மருத்துவமனை புள்ளிவிவரங்களை அனுப்பவில்லை. அப்படி அனுப்பவில்லை என்றால் கட்டுப்பாட்டு அறை ஏன் சுகாதாரத் துறைக்குத் தெரியப்படுத்தவில்லை. கொரோனா மரணங்களை மறைத்தது மருத்துவமனையா அல்லது கொரோனா கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளா உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்?… எங்கே அந்த 65  உடல்கள்? – வெளியான அதிர்ச்சி தகவல்!

இதுகுறித்து விளக்கமளித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், “நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டிய பிறகே மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் கொரோனா உயிரிழப்பு குறித்த உண்மையைக் கூறினார்கள். ஊழியர்கள் பற்றாக்குறையால் தான் குறித்த நேரத்தில் புள்ளிவிவரங்களைத் தெரிவிக்க முடியவில்லை என்று பாபா மருத்துவமனை நிர்வாகிகள் கூறினார்கள்” என்கின்றனர். இதுகுறித்து முழு உண்மை என்னவென்று தெரியாமல் இருப்பதால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுபோத் யூனியல் கூறியிருக்கிறார்.