தளர்வுகளுடன் லாக்டவுனை நீட்டித்த உத்தரகாண்ட் அரசு… ஜிம்கள், கோச்சிங் சென்டர்கள் திறக்க அனுமதி

தளர்வுகளுடன் லாக்டவுனை நீட்டித்த உத்தரகாண்ட் அரசு… ஜிம்கள், கோச்சிங் சென்டர்கள் திறக்க அனுமதி

உத்தரகாண்டில் கொரோனா லாக்டவுனை மேலும் 6 நாட்களுக்கு அம்மாநில அரசு நீட்டித்துள்ளது. அதேசமயம் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

உத்தரகாண்டில் முதல்வர் திராத் சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் மற்ற பகுதிகளை போல் உத்தரகாண்டிலும் கொரோனா வைரஸின் 2வது அலையின் தாக்கம் இருந்தது. கொரோனா பாதிப்பை குறைக்க லாக்டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசு எடுத்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

தளர்வுகளுடன் லாக்டவுனை நீட்டித்த உத்தரகாண்ட் அரசு… ஜிம்கள், கோச்சிங் சென்டர்கள் திறக்க அனுமதி
திராத் சிங் ராவத்

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இந்நிலையில் நேற்று உத்தரகாண்டில் கொரோனா லாக்டவுனை மேலும் 6 தினங்களுக்கு அம்மாநில அரசு நீட்டித்துள்ளது. அதேசமயம் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. ஜிம்கள், கோச்சிங் சென்டர்களை 50 சதவீத திறனில் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.

தளர்வுகளுடன் லாக்டவுனை நீட்டித்த உத்தரகாண்ட் அரசு… ஜிம்கள், கோச்சிங் சென்டர்கள் திறக்க அனுமதி
ஜிம்

ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற தினங்களில் சந்தைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் முஷ்சோரி மற்றும் நைனிடால் ஆகிய நகரங்களில் மட்டும் ஞாயிறு சந்தை திறந்திருக்கும். அதேசமயம் அந்நகரங்களில் செவ்வாய்க்கிழமை சந்தைகள் மூடப்படும். தற்போதைக்கு பள்ளி சிறுவர்களுக்கான கோச்சிங் வகுப்புகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.