அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. உத்தரகாண்டில் ஊரடங்கு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. உத்தரகாண்டில் ஊரடங்கு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு

உத்தரகாண்டில் கொரோனா ஊரடங்கை வரும் ஜூன் 1ம் தேதி வரை அம்மாநில அரசு நீட்டித்துள்ளது.

உத்தரகாண்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க அம்மாநில அரசு கொரோனா ஊரடங்கை வரும் ஜூன் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அம்மாநில அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளரும், அமைச்சரவை அமைச்சருமான சுபோத் யூனியல் கூறியதாவது: வர்த்தகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, முதல்வர் திராத் சிங் ராவத்துடன் கலந்தாலோசித்த பின்னர், காலை 7 முதல் 10 மணி வரை பதிலாக காலை 8 மணி முதல் 11 மணி வரை சந்தையை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. உத்தரகாண்டில் ஊரடங்கு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு
முதல்வர் திராத் சிங் ராவத்

பால், இறைச்சி, மீன், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளின் கடைகள் திறக்கலாம். ரேஷன் மற்றும் மளிகை கடைகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் மே 28ம் தேதியன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வெளியே செல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. உத்தரகாண்டில் ஊரடங்கு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு
சுபோத் யூனியல்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா உள்பட பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்து உள்ளன. தற்போது நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதேசமயம் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை கவலையளிக்கும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.