காங்கிரஸ் பெண் தலைவரின் வயதை குறிப்பிட்டு கிண்டலடித்த பா.ஜ.க. தலைவர்.. மன்னிப்பு கேட்ட உத்ரகாண்ட் முதல்வர்

 

காங்கிரஸ் பெண் தலைவரின் வயதை குறிப்பிட்டு கிண்டலடித்த பா.ஜ.க. தலைவர்.. மன்னிப்பு கேட்ட உத்ரகாண்ட் முதல்வர்

உத்ரகாண்டில் காங்கிரஸ் பெண் தலைவரின் வயதை குறிப்பிட்டு கிண்டலடித்த அம்மாநில பா.ஜ.க. தலைவரின் பேச்சுக்கு அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

உத்தரகாண்ட் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் காங்கிரஸை சேர்ந்த இந்திரா ஹிருதயேஷை. இவர் அண்மையில் பா.ஜ.க.வை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் தொடர்பில் உள்ளனர் என்று தெரிவித்தார். அதாவது அவர்கள் காங்கிரஸ் பக்கம் வர விரும்புகிறார்கள் என்று அர்த்தத்தில் இந்திரா தெரிவித்து இருந்தார். இது தொடா்பாக உத்தரகாண்ட் பா.ஜ.க. தலைவர் பன்சிதர் பகத் கூறுகையில் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் அவரது வயதை குறிப்பிட்டு கருத்து தெரிவித்தார்.

காங்கிரஸ் பெண் தலைவரின் வயதை குறிப்பிட்டு கிண்டலடித்த பா.ஜ.க. தலைவர்.. மன்னிப்பு கேட்ட உத்ரகாண்ட் முதல்வர்
இந்திரா ஹிருதயேஷை

பீம்தாலில் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பன்சிதர் பகத் பேசுகையில், அவர்கள் ஏன் வயதான பெண்ணை தொடர்புகொள்கிறார்கள்? என்று இந்திரா ஹிருதயேஷை கேலி செய்தார். இது பெரும் புயலை கிளப்பியது. இந்த அவமதிக்கும் கருத்துக்களுக்காக இந்திரா ஹிருதயேஷையிடம் பன்சிதர் பதக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் பன்சிதர் பகத்தின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக இந்திரா ஹிருதயேஷையிடம் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

காங்கிரஸ் பெண் தலைவரின் வயதை குறிப்பிட்டு கிண்டலடித்த பா.ஜ.க. தலைவர்.. மன்னிப்பு கேட்ட உத்ரகாண்ட் முதல்வர்
பன்சிதர் பகத்

இது தொடர்பாக திரிவேந்திர சிங் ராவத் நேற்று டிவிட்டரில், இன்று நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். உங்களுக்கும், வேதனையடைந்த மற்ற அனைவருக்கும் (பன்சிதர் பகத் பேசிய கருத்துக்களால் நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நாளை உங்களை அழைக்கிறேன். இதற்கு மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார். இந்த டிவிட்டை இந்திரா ஹிருதயேஷைக்கு டேக் செய்து இருந்தார்.