கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள்.. சமூகத்துக்கு என்ன மாதிரியான செய்தியை தருகிறோம்? உத்தரகாண்ட் முதல்வர்

 

கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள்.. சமூகத்துக்கு என்ன மாதிரியான செய்தியை தருகிறோம்? உத்தரகாண்ட் முதல்வர்

கிழிந்த ஜீன்ஸ் அணிந்த பெண்கள் சமூகத்தில் மக்களை சந்தித்து பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வெளியே சென்றால், சமூகத்துக்கு நாம் என்ன மாதிரியான செய்தியை நாம் தருகிறோம் என்று உத்தரகாண்ட் முதல்வர் பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டெராடூனில் குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்காக அம்மாநிலம் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் திராத் சிங் ராவத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: அண்மையில் விமானத்தில் செல்லும் போது ஒரு கிழிந்த ஜீன்ஸ் அணிந்த ஒரு தன்னார்வ தொண்டு பெண் தனது குழந்தைகளுடன் பயணம் செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற பெண்கள் சமூகத்தில் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வெளியே சென்றால், சமூகத்துக்கு, நம் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான செய்தியை நாம் தருகிறோம்? இது எல்லாம் வீட்டிலேயே தொடங்குகிறது.

கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள்.. சமூகத்துக்கு என்ன மாதிரியான செய்தியை தருகிறோம்? உத்தரகாண்ட் முதல்வர்
திராத் சிங் ராவத்

நாம் என்ன செய்கிறோமோ, அதை நம் குழந்கைள் பின்பற்றுகின்றன. வீட்டில் சரியான கலாச்சாரம் கற்பிக்கப்படும் ஒரு குழந்தை, அவர் எவ்வளவு நவீனமானவராக இருந்தாலும், வாழ்க்கையில் ஒரு போதும் தோல்வியடை மாட்டார். (பெண்கள்) வெறும் முழங்கால்களை காண்பித்தல், கிழிந்த டெனிம் ஜீன்ஸ் அணிந்து பணக்கார குழந்தைகளை போல தோற்றமளித்தல் இவை இப்போது (வீ்ட்டில்) கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகள். வீட்டில் இல்லாவி்ட்டால் எங்கிருந்து வருகிறது? பள்ளியில் படிக்கும்போது இது நடக்கவில்லை. ஆசிரியர்கள் அல்லது பள்ளிகளின் தவறு என்ன? நான் என் மகனை எங்கே அழைத்து செல்கிறேன். முழங்கால்களையும், ஜீன்ஸ் அணிந்ததையும் காட்டுகிறேன்? பெண்கள் குறைவில்லாமல், முழங்கால்களை காட்டுகிறார்கள். இது நல்லதா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள்.. சமூகத்துக்கு என்ன மாதிரியான செய்தியை தருகிறோம்? உத்தரகாண்ட் முதல்வர்
காங்கிரஸ்

முதல்வரின் இந்த கருத்தை காங்கிரஸ் கிண்டல் அடித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சஞ்சய் ஜா டிவிட்டரில், கிழிந்த ஜீன்ஸ் அணிவது நமது கலாச்சாரத்தை அழிக்கிறது. தெரிகிறது. இது துஷ்பிரயோகத்திற்கு வழி வகுக்கிறது. மற்றும் சமூக முறிவு. நமது பழமையான பழக்கவழக்கங்களுக்கு எதிரான இந்த தெய்வகுற்றத்தை (கிழிந்த ஜீன்ஸ் அணிவது) பெண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் கூறுகிறார் என பதிவு செய்து இருந்தார்.