ஆம் ஆத்மியின் சவாலை ஏற்ற பா.ஜ.க. அமைச்சர்.. சூடு பிடிக்கும் உத்ரகாண்ட் அரசியல்….

 

ஆம் ஆத்மியின் சவாலை ஏற்ற பா.ஜ.க. அமைச்சர்.. சூடு பிடிக்கும் உத்ரகாண்ட் அரசியல்….

உத்ரகாண்டில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் குறித்து எங்களிடம் விவாதிக்க தயாரா என்று ஆம் ஆத்மி விடுத்த சவாலை அம்மாநில அமைச்சர் ஏற்றுக்கொண்டார். இதனால் உத்ரகாண்ட் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சிக்கு மற்ற மாநிலங்களில் தடம் பதிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில் உத்ரகாண்டில் நடைபெற உள்ள அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. அதற்கான வேலைகளையும் ஆம் ஆத்மி தொடங்கி விட்டது. உத்ரகாண்டில் தற்போது முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆம் ஆத்மியின் சவாலை ஏற்ற பா.ஜ.க. அமைச்சர்.. சூடு பிடிக்கும் உத்ரகாண்ட் அரசியல்….
மனிஷ் சிசோடியா

ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி துணை முதல்வருமான சிசோடியா கடந்த சில தினங்களுக்கு முன் 2 நாள் பயணமாக உத்ரகாண்ட் சென்று இருந்தார். அங்கு மனிஷ் சிசோடியா செய்தியாளர்கள் சந்திப்பின் போது, 2017ம் ஆண்டு முதல் அம்மாநிலத்தில் கல்வி உள்பட 5 துறைகளில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க தயாரா என்று முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு சவால் விடுத்தார். மனிஷ் சிசோடியாவின் சவாலை உத்ரகாண்ட் அமைச்சர் மதன் கவுசிக் ஏற்றுக்கொண்டதாக தகவல்.

ஆம் ஆத்மியின் சவாலை ஏற்ற பா.ஜ.க. அமைச்சர்.. சூடு பிடிக்கும் உத்ரகாண்ட் அரசியல்….
மதன் கவுசிக்

இதனையடுத்து மனிஷ் சிசோடியா தனது டிவிட்டரில், உத்ரகாண்ட் அமைச்சர் மதன் கவுசிக் எனது சவாலை ஏற்றுக்கொண்டு, கல்வி, சுகாதாரம், மின்சாரம், நீர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய 5 துறைகளில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மேற்கொண்ட வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க முன்வந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். விவாதம் செய்வதற்கான இடத்தையும், நேரத்தையும் என்னிடம் தெரிவிக்கும்படி அவரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார். ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையிலான வார்த்தை மோதல்களால் உத்ரகாண்ட் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.