இனி மக்கள் மோடி பெயருக்கு வாக்களிக்க போவதில்லை…. உத்தரகாண்ட் பா.ஜ.க. தலைவர் எச்சரிக்கை

 

இனி மக்கள் மோடி பெயருக்கு வாக்களிக்க போவதில்லை…. உத்தரகாண்ட் பா.ஜ.க. தலைவர் எச்சரிக்கை

2022ல் நடைபெற உள்ள உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் மோடி பெயரக்கு வாக்களிக்க மாட்டார்கள் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் பன்சிதர் பகத் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.

உத்தரகாண்டில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 2022ல் அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற 2 ஆண்டுகள் உள்ளபோதிலும், பா.ஜ.க. இப்போதே அதற்கான பணிகளை தொடங்கி விட்டது. அம்மாநில பா.ஜ.க. தலைவர் பன்சிதர் பகத் நேற்று தங்களது கட்சி எம்.எல்,ஏ.க்கள் மற்றும் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

இனி மக்கள் மோடி பெயருக்கு வாக்களிக்க போவதில்லை…. உத்தரகாண்ட் பா.ஜ.க. தலைவர் எச்சரிக்கை
உத்தர காண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் மோடியின் பெயருக்கு மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. அவர்கள் ஏற்கனவே அவரது பெயரில் போதுமான அளவு வாக்களித்துள்ளனர். உங்கள் செயல்திறன் மட்டுமே உங்கள் வாக்குகளை வெல்ல முடியும். மோடியின் பெயரில் தங்கள் படகு பயணிக்கும் என்று நம்புபவர்கள் தவறு. தனிநபர்களின் செயல்திறன் அடிப்படையில் மட்டுமே தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இனி மக்கள் மோடி பெயருக்கு வாக்களிக்க போவதில்லை…. உத்தரகாண்ட் பா.ஜ.க. தலைவர் எச்சரிக்கை
பன்சிதர் பகத்

பன்சிதர் பகத் கருத்தை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி துணை தலைவர் சூர்யகாந்த் தாஸ்மனா கூறுகையில், பகத் சரியான அறிக்கையை வெளியிட்டதற்காக அவரை வாழ்த்துகிறோம். மோடி அலை முடிவுக்கு வந்து விட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால்தான் அவர் தனது எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களிடம் வாக்குகள் பெறுவதற்காக தங்கள் சொந்த செயல்திறனை கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார். 2017 சட்டப்பேரவை தேர்தலிலும், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் மோடியின் பெயரில்தான் அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பதையும் ஒப்புக்கொள்கிறது என தெரிவித்தார்.