எம்.எல்.ஏ.க்கள் நிதியை குறைத்த உத்தரகாண்ட் அரசு… பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி…

 

எம்.எல்.ஏ.க்கள் நிதியை குறைத்த உத்தரகாண்ட் அரசு… பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி…

கோவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியை கருத்தில் கொண்டு எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை குறைக்க உத்ரகாண்ட் அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்டில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு அம்மாநில அரசு செலவினங்களை குறைத்து வருகிறது. அந்த வகையில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை குறைக்க முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அரசு முடிவு எடுத்துள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் நிதியை குறைத்த உத்தரகாண்ட் அரசு… பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி…
உத்ரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்

எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை குறைக்கும் மாநில அரசின் முடிவால் ஆளும் கட்சியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக முசோரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி கூறுகையில், ஏராளமான பிரச்சினைகள் உள்ளன, நீங்க எவ்வளவு வேலை செய்தீர்கள் என்பது விஷயம் அல்ல, உங்கள் தொகுதியில் உள்ள அனைவரும் தனது வீட்டுக்கு அருகில் சாலையை விரும்புகிறார்கள், வடிகால் சரியாக சரியாக செய்யப்பட வேண்டும்.

எம்.எல்.ஏ.க்கள் நிதியை குறைத்த உத்தரகாண்ட் அரசு… பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி…
கணேஷ் ஜோஷி

எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை குறைத்தது பிரச்சினையில்லை, ஆனால் எம்.எல்.ஏ.க்கள் நிதி பற்றாக்குறையால் மேம்பாட்டு பணிகள் பாதிக்கப்படுகின்றன. கிராம தலைவர் முதல் மற்றவர்கள் வரை அனைவரும் எம்.எல்.ஏ.வை சந்திக்கின்றனர். ரூ.85 லட்சத்தை கொண்டு டெஹ்ராடூன் (11 வார்டுகள்), முசோரி (13 வார்டுகள்), 40 கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும் இதர பகுதிகளை பராமரிக்க வேண்டும். இந்த சிறிய தொகையை கொண்டு அந்த பகுதிகளை எப்படி பராமரிக்க முடியும்? என தெரிவித்தார்.