உத்தரகாண்ட் புதிய முதல்வர் தன் சிங் ராவத்?… தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க.

 

உத்தரகாண்ட் புதிய முதல்வர் தன் சிங் ராவத்?… தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க.

உத்தரகாண்டின் புதிய முதல்வராக தன் சிங் ராவத் நியமிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக அம்மாநில முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் நேற்று கட்சி தலைமையின் உத்தரவையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வரை பா.ஜ.க. தலைமை மாற்றியது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகும் பல நடடிக்கைகளில் இது முதல் நடவடிக்கைளில் இது முதலாவது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தரகாண்ட் புதிய முதல்வர் தன் சிங் ராவத்?… தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க.
பா.ஜ.க.

திரிவேந்திர சிங் ராவத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்ச அடிபடுகிறது. பா.ஜ.க.வின் பல தலைவர்கள் பெயர் முதல்வர் பதவிக்கு அடிப்பட்டாலும், அந்த கட்சி எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சருமான தன் சிங் ராவத் முதல்வராக நியமிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 50 வயதான தன் சிங் ராவத் டபுள் எம்.ஏ. பட்டம் (வரலாறு மற்றும் அரசியல் அறிவியல்) பெற்றவர்.

உத்தரகாண்ட் புதிய முதல்வர் தன் சிங் ராவத்?… தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க.
திரிவேந்திர சிங் ராவத்

உத்தரகாண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு திரிவேந்தி சிங் ராவத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 4 ஆண்டுகளுக்கு இந்த மாநில மக்களுக்கு சேவையாற்றும் பொன்னான் வாய்ப்பை பா.ஜ.க. எனக்கு கொடுத்தது. இது போன்ற வாய்ப்பு கிடைக்கும் என்று நான் ஒரு போதும் நினைத்து இல்லை. இப்போது முதல்வராக சேவையாற்ற வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கட்சி முடிவு செய்துள்ளது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை கவர்னரிடம் வழங்கினேன். நாளை (இன்று) காலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்தில் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்