• February
    28
    Friday

Main Area

Main



பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆசிட் ஊற்றி பெண் எரிப்பு! 

fire
fire

உத்திரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆசிட் கொண்டு எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பாஹ்ரைச் மாவட்டத்தில் உள்ளது கடார்னியாகட் உயிரியல் சரணாயலம். அதற்கு அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் ஆசிட் கொண்டு எரிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆசிட் போன்ற வேதிப்பொருள் கொண்டு இளம்பெண்ணின் உடல் எரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இளம்பெண் நிர்வாண நிலையில் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

கொலை

தகவல் அறிந்து விரைந்து  சென்ற காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் முகம் உள்ளிட்ட பகுதிகள் ஆசிட் கொண்டு எரிக்கப்பட்டுள்ளதால் சிதைந்த நிலையில் இருப்பதாகவும், இதனால் அடையாளத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளம்பெண்ணின் படுகொலை குறித்து விசாரிக்க தனிப்படை ஒன்றை மாவட்ட காவல்துறை நியமித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.