• February
    24
    Monday

Main Area

Main



என் மனைவி சாப்பிட லட்டு மட்டுமே தருகிறார்! விவாகரத்து செய்த கணவன்!!

Ladoo
Ladoo

உத்திர பிரதேச மாநிலத்தில் சாப்பிட லட்டு மட்டுமே கொடுத்த மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மீருட் பகுதியைச் சேர்ந்த நபருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்கான காரணத்தை கேட்டால், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Ladoo

மனைவி, தனக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் லட்டு மட்டுமே கொடுப்பதாகவும், அதற்கு இடைப்பட்ட நேரத்தில் எதுவுமே கொடுப்பதில்லை என்றும் கூறும் நபர், இதற்காக தான் நான் மனைவியை விவாகரத்து செய்வதாகவும் தெரிவித்தார். 

இதுகுறித்து மனைவியிடம் விசாரித்த அதிகாரிகள், 2 வேளைக்கு 8 லட்டு மட்டுமே சாப்பிட்டு வந்தால் கணவருக்கு நல்லது என மாந்திரீகர் ஒருவர் கூறியுள்ளார். அதனை கேட்டு சில மாதங்களாக கணவருக்கு லட்டு மட்டுமே கொடுத்து வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.