பிரபலமாகும் பிரதமர் மோடியின் துண்டு மாஸ்க்… உத்தர பிரதேச நெசவாளர்கள் ஹேப்பி…

 

பிரபலமாகும் பிரதமர் மோடியின்  துண்டு மாஸ்க்… உத்தர பிரதேச நெசவாளர்கள் ஹேப்பி…

மக்களை கவரும் தலைவர்களில் ஒருவராக பிரதமர் மோடி இருக்கிறார். பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 14ம் தேதியன்று லாக்டவுன் 2.0 குறித்து தொலைக்காட்சியில் அறிவிக்கும்போது, தனது வாய் மற்றும் மூக்கை சிகப்பு மற்றும் வெள்ளை கலரான அழகான துண்டை பயன்படுத்தி மறைத்து இருந்தார். இந்த துண்டு தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் பாரம்பரியமான இந்த துண்டை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிரபலமாகும் பிரதமர் மோடியின்  துண்டு மாஸ்க்… உத்தர பிரதேச நெசவாளர்கள் ஹேப்பி…

இதனால் இந்த துண்டுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து உத்தர பிரதேசம் பாரான்பாகியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் அந்த துண்டை உற்பத்தி செய்வதில் தீவிரமாக உள்ளனர். பாரம்பாகி மாவட்டத்தில் இந்த துண்டை உற்பத்தி செய்து வரும் ஷாஹப்புரை சேர்ந்த உபைத் அன்சாரி இது குறித்து கூறுகையில், தொலைக்காட்சியில் பிரதமர் மோடி இந்த துண்டை அணிந்தது முதல் நாங்கள் இங்கு உற்பத்தியை ஆரம்பித்து விட்டோம். இந்த துண்டு விஸ்கோஷ் துணியால் தயாரிக்கப்படுகிறது. இங்கு தேவை இன்னும் உள்ளது மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.

பிரபலமாகும் பிரதமர் மோடியின்  துண்டு மாஸ்க்… உத்தர பிரதேச நெசவாளர்கள் ஹேப்பி…

மொத்த விற்பனைக்கு ரூ.70 முதல் 75 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த துண்டு இந்த மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இந்த துண்டு வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளது. சுமார் ஆயிரணக்கான பேர் இந்த துண்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார். மேலும் கான்பூரை சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக இந்த துண்டுகளை வாங்கி வருகின்றனர்.