ஒரே சமயத்தில் 25 பள்ளிகளில் வேலை பார்த்து ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய கில்லாடி பெண் ஆசிரியை கைது..

ஒரே சமயத்தில் 25 பள்ளிகளில் வேலை பார்த்து ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய கில்லாடி பெண் ஆசிரியை கைது..

உத்தர பிரதேசத்தில் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் முழுநேர அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அனாமிகா சுக்லா. அந்த பள்ளியில் பணியாற்றிய அதேநேரத்தில் அந்த பெண் ஆசிரியர் அம்பேத்கர் நகர், பாக்பத், அலிகார், சஹரன்பூர் மற்றும் பிரயாகராஜ் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள 25 பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். இப்படி சுமார் 13 மாதங்கள் 25 பள்ளிகளில் பணியாற்றி மொத்தம் ரூ.1 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார்.

ஒரே சமயத்தில் 25 பள்ளிகளில் வேலை பார்த்து ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய கில்லாடி பெண் ஆசிரியை கைது..

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றுவது சாத்தியமில்லை. ஆனால் அனாமிகா சுக்லா மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு 13 மாதங்களாக 25 பள்ளிகளிலும் சம்பளத்தை பெற்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், அம்மாநில கல்வி துறை ஆசிரியர்கள் தொடர்பான தகவல்களை டிஜிட்டல்மயமாக்கி வருகிறது. அதற்கு ஆசிரியர்கள் தனிப்பட்ட விவரங்கள், பணிக்கு சேர்ந்த நாள் மற்றும் பணிஉயர்வு உள்ளிட்ட விவரங்கள் தேவை. அப்படி பதிவு செய்யும்போது அனாமிகா சுக்லாவின் ஒரே மாதிரியான தனிநபர் விவரங்கள் 25 பள்ளிகளின் பட்டியலில் இருந்தது தெரியவந்தது.

ஒரே சமயத்தில் 25 பள்ளிகளில் வேலை பார்த்து ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய கில்லாடி பெண் ஆசிரியை கைது..

அதன் பிறகுதான் அனாமிகா சுக்லாவின் மோசடி வெளியே தெரிந்தது. இதனையடுத்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியை அனாமிகா சுக்லாவை நேற்று கைது செய்தனர். பள்ளி கல்வி இயக்குனர் ஜெனரல் விஜய் கிரண் ஆனந்த் இது குறித்து கூறுகையில், சம்பந்த ஆசிரியர் குறித்து உண்மைகளை தெரிந்து கொள்ள விசாரணை நடந்து வருகிறது. உத்தர பிரதேச தொடக்க பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை குறித்து நிகழ்நேர கண்காணிப்பு இருந்தபோதிலும் ஆசிரியர் அனாமிகா சுக்லா இதை செய்ய முடிந்தது ஆச்சரியமாக இருக்கிறது என தெரிவித்தார்.