தொடர்ந்து லாக்டவுனை நீட்டிக்கும் உத்தர பிரதேச அரசு.. மே 17ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு..

தொடர்ந்து லாக்டவுனை நீட்டிக்கும் உத்தர பிரதேச அரசு.. மே 17ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு..

உத்தர பிரதேசத்தில் கோவிட் லாக்டவுனை மே 17ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு அம்மாநில அரசு நீட்டித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனையடுத்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநிலத்தில் 15 தினங்கள் லாக்டவுனை அமல்படுத்தும்படி உத்தர பிரதேச அரசை அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் அறிவுறுத்தியது. ஆனால் அப்போது அதற்கு யோகி அரசு மறுத்து விட்டது.

தொடர்ந்து லாக்டவுனை நீட்டிக்கும் உத்தர பிரதேச அரசு.. மே 17ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு..
அலகாபாத் உயர் நீதிமன்றம்

இருப்பினும் கொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்து முதலில் வார இறுதி லாக்டவுனை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு செயல்படுத்தியது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதனையடுத்து முழு ஊரடங்கை அமல்படுத்தி தொடர்ச்சியாக அதனை நீட்டி வந்தார். கடைசியாக மே 10ம் தேதி வரை கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் என உத்தர பிரதேச அறிவித்து இருந்தது.

தொடர்ந்து லாக்டவுனை நீட்டிக்கும் உத்தர பிரதேச அரசு.. மே 17ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு..
லாக்டவுன்

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று உத்தர பிரதேசத்தில் புதிதாக 26,847 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், கோவிட் லாக்டவுன் மே 17ம் தேதி நீட்டிக்கப்படுவதாக உத்தர பிரதேச அரசு நேற்று அறிவித்தது. இது தொடர்பாக உத்தர பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக கூறுகையில், மே 17ம் தேதி காலை 7 மணி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளத. அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து கடைகளும், நிறுவனங்களும் தொடர்ந்து மூடப்படும். இந்த ஏற்பாடுகள் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸின் 2வது அலை சங்கிலியை உடைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.