பசுவை கொலை செய்தால் 10 ஆண்டு ஜெயில்… 5 லட்சம் அபராதம்… உத்தர பிரதேச அரசு கொண்டு வந்தது அவசர சட்டம்

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பசுக்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். உத்தர பிரதேசத்தில் பசுக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க பசு வதை தடுப்பு (திருத்த) சட்டம் 2020 அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத்

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடைபெற்ற அம்மாநில் அமைச்சரவை கூட்டத்தில், பசு வதை தடுப்பு (திருத்த) அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அவசர சட்டம் தற்போதுள்ள சட்டத்தை (உத்தர பிரதேச பசு வதை தடுப்பு சட்டம், 1955) மிகவும் வலுவானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதையும், பசு வதை தொடர்பான சம்பவங்கள் முற்றிலுமாக நிறுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது என அம்மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுக்கள் போக்குவரத்து

உத்தர பிரதேச பசு வதை தடுப்பு அவசர சட்டத்தின்படி, முதல் முறை பசு கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 1 முதல் 7 ஆண்டுகள் வரை ஜெயில் மற்றும் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை என்றால் குற்றவாளிக்கு 10 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் பசுக்கள் அல்லது எருதுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்றால் புதிய சட்டத்தின்கீழ் வாகன டிரைவர், ஆபரேட்டர் மற்றும் வாகன உரிமையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படும். பசுவின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கில் உணவு மற்றும் தண்ணீர் வழங்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு வருடம் கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்படலாம். மேலும் சிறை தண்டனையை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.

Most Popular

“பத்தே நிமிஷத்துல பர்சனல் லோன் தர்றோம்”பலர் பர்ஸை காலி செய்த கூட்டம் -ரிலையன்ஸ் கம்பெனி என்று ரீல் விட்டு பல கோடியுடன் ஓட்டம்

டெல்லியில் உள்ள ரன்ஹோலாவில் விகாஸ் நகரில் விஷால், விததா மற்றும் அமித் அனைவரும் இர்பான் என்பவருடன் சேர்ந்து ஒரு போலி கால் சென்டர் நடத்தி 2.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது...

புதுச்சேரியில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், சட்டபேரவை...

பி.வி.சிந்து பயிற்சி எடுக்கும் அகாடமியில் ஒரு வீரருக்கு கொரோனா!

கொரொனா தாக்குதல் இந்தியாவில் மிக அதிகளவில் உள்ளது. பெங்களூருவில் ஹாக்கி வீரர்களுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். இப்போது பேட்மின்டன் பிரிவிலும் ஒருவருக்கு...

96 மணி நேர கண்காணிப்பு காலம் முடிந்தது… பிரணாப் உடல் நிலை பற்றி அவர் மகன் பேட்டி

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அளித்திருந்த 96 மணி நேர அபாய காலகட்டத்தை அவர் கடந்துவிட்டார் என்று பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த 10ம் தேதி டெல்லி ஆர்மி...
Do NOT follow this link or you will be banned from the site!