படிப்படியாக லாக்டவுன் நாட்களை அதிகரிக்கும் உத்தர பிரதேச அரசு.. வார இறுதி லாக்டவுன் 3 நாட்களாக அதிகரிப்பு

படிப்படியாக லாக்டவுன் நாட்களை அதிகரிக்கும் உத்தர பிரதேச அரசு.. வார இறுதி லாக்டவுன் 3 நாட்களாக அதிகரிப்பு

உத்தர பிரதேசத்தில் வார இறுதி லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாகவும், திங்கட்கிழமையும் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

முழு நாடும் கொரோனா வைரஸால் சிக்கி தவிக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடுமையான கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வார இறுதி லாக்டவுனை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலானஅரசு அமல்படுத்தியது.

படிப்படியாக லாக்டவுன் நாட்களை அதிகரிக்கும் உத்தர பிரதேச அரசு.. வார இறுதி லாக்டவுன் 3 நாட்களாக அதிகரிப்பு
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

வெள்ளக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி லாக்டவுனை உத்தர பிரதேச அரசு அமல்படுத்தியது. ஆனால் அதற்கு பலன் கிடைத்தது மாதிரி தெரியவில்லை. கடந்த புதன்கிழமையன்று உத்தர பிரதேசத்தில் 29,824 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மேலும் அன்று அம்மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 266 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

படிப்படியாக லாக்டவுன் நாட்களை அதிகரிக்கும் உத்தர பிரதேச அரசு.. வார இறுதி லாக்டவுன் 3 நாட்களாக அதிகரிப்பு
அலகாபாத் உயர் நீதிமன்றம்

இந்நிலையில் உத்தர பிரதேச அரசு, திங்கட்கிழமையையும் சேர்த்து வார இறுதி லாக்டவுனை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் ஏப்ரல் 30ம் தேதி இரவு 8 மணி முதல் மே 4ம் தேதி காலை 7 மணி வரை (மொத்தம் 3 நாட்கள்) லாக்டவுன் அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் உத்தர பிரதேசத்தில் 15 தினங்கள் லாக்டவுனை அமல்படுத்தும்படி அலகாபாத் உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.