இறந்து விட்டதாக தவறான செய்தி வெளியான சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா…

இறந்து விட்டதாக தவறான செய்தி வெளியான சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா…

சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி நிறுவனருமான முலாயம் சிங்குக்கு தற்போது 80 வயதாகிறது. வயது மூப்பு காரணமாக தற்போது பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வது கிடையாது. அவசியமில்லாமல் அவர் வீ்ட்டை விட்டு வெளியே வருவது கிடையாது. மேலும் கட்சி பொறுப்பும் அகிலேஷ் வசம் சென்று விட்டதால் முலாயம் சிங் கட்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்வது கிடையாது.

இறந்து விட்டதாக தவறான செய்தி வெளியான சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா…
முலாயம் சிங் யாதவ்

இந்த சூழ்நிலையில் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். முலாயம் சிங் யாதவ் உடல் நலம் குறித்து சமாஜ்வாடி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இறந்து விட்டதாக தவறான செய்தி வெளியான சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா…
சமாஜ்வாடி கட்சி

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் கோவிட்-19 பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவ் என வந்துள்ளது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவருக்கு கொரோனாவுக்கான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ் காலமானார். பெயர் குழப்பத்தால் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ்தான் இறந்து விட்டார் என தவறாக கருதி ஏராளமான மக்கள் இரங்கல் செய்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.