எப்படியாவது ஜெயிக்கணும்.. மாவட்ட, நகர கமிட்டிகளுக்கு புதிய தலைவர்களை நியமனம் செய்த உத்தர பிரதேச காங்கிரஸ்

எப்படியாவது ஜெயிக்கணும்.. மாவட்ட, நகர கமிட்டிகளுக்கு புதிய தலைவர்களை நியமனம் செய்த உத்தர பிரதேச காங்கிரஸ்

எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவட்ட, நகர கமிட்டிகளுக்கு புதிய தலைவர்களை அம்மாநில காங்கிரஸ் நியமனம் செய்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய பா.ஜ.க. ஆட்சியின் பதவிக்காலம் மே மாதத்தில் முடிவடைய உள்ளது. இதனால் 2022ம் ஆண்டில் உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இப்போதே அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சமாஜ்வாடி, பா.ஜ.க.. மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

எப்படியாவது ஜெயிக்கணும்.. மாவட்ட, நகர கமிட்டிகளுக்கு புதிய தலைவர்களை நியமனம் செய்த உத்தர பிரதேச காங்கிரஸ்
முதல்வர் யோகி ஆதித்யநாத்

இந்நிலையில் 70 ஆண்டுகளாக இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த மற்றும் பாரம்பரியமிக்க கட்சியான காங்கிரஸ் நிலைமை தற்போது மிகவும் பரிதாபமாக உள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இல்லாமல் போய் விட்டது. பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதனால் செல்வாக்கை மீட்க வேண்டுமானால் எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

எப்படியாவது ஜெயிக்கணும்.. மாவட்ட, நகர கமிட்டிகளுக்கு புதிய தலைவர்களை நியமனம் செய்த உத்தர பிரதேச காங்கிரஸ்
பிரியங்கா காந்தி

உத்தர பிரதேச தேர்தலை மனதில் வைத்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கில், அம்மாநிலத்தில் மாவட்டங்கள், நகரங்களின் காங்கிரஸ் பிரிவுகளுக்கு புதிய தலைவர்களை அந்த கட்சி நியமனம் செய்துள்ளது. உதாரணமாக கண்ணாஜ் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தினேஷ் பாலிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மொராதாபாத் மாவட்ட காங்கிரஸ் தலைவராக அஸ்லம் குர்ஷித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.