உத்தர பிரதேசத்தில் வரிசையாக அமைச்சர்களை தொற்றும் கொரோனா.. முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை

 

உத்தர பிரதேசத்தில் வரிசையாக அமைச்சர்களை தொற்றும் கொரோனா.. முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை

உத்தர பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக தினமும் ஒரு அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதியன்று அம்மாநில அமைச்சர் கமல் ராணி கொரோனாவுக்கு பலியாகினார். இந்நிலையில் கடந்த 16ம் தேதியன்று அம்மாநில அமைச்சர் சேட்டன் சவுகான் கொரோனாவுக்கு பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேசத்தில் வரிசையாக அமைச்சர்களை தொற்றும் கொரோனா.. முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை
கோவிட்-19 பரிசோதனை

இந்நிலையில் கடந்த சில தினங்களாக அம்மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அமைச்சருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த புதன்கிழமையன்று கேபினட் அமைச்சர் புபேந்திர சிங் சவுத்திரிக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதியானது. அதற்கு அடுத்த நாள் மற்றொரு கேபினட் அமைச்சர் சித்தார்த் நாத் சிங்குக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.

உத்தர பிரதேசத்தில் வரிசையாக அமைச்சர்களை தொற்றும் கொரோனா.. முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை
சதீஷ் மஹானா

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தர பிரதேச கேபினட் அமைச்சர் சதீஷ் மஹானா தனக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து கொரோனா வைரஸ் செய்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து சதிஷ் மஹானா டிவிட்டரில், தனக்கு கொரோனா வைரஸ் இருப்தாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி நான் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன். கடந்த சில தினங்கள் என்னுடன் தொடர்பில இருந்தவர்கள் தாங்களாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என பதிவு செய்து இருந்தார். உத்தர பிரதேச அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது.