நெருக்கடியை வாய்ப்பாக மாற்றிய உத்தர பிரதேசம்…. லாக்டவுனில் சானிடைசர் தயாரிப்பில் ரூ.137 கோடி வருவாய்

நெருக்கடியை வாய்ப்பாக மாற்றிய உத்தர பிரதேசம்…. லாக்டவுனில் சானிடைசர் தயாரிப்பில் ரூ.137 கோடி வருவாய்

கொரோனா வைரஸ் காலத்தில் உத்தர பிரதேசம் சானிடைசர் தயாரிப்பு மற்றும் விற்பனை வாயிலாக ரூ.137 கோடி ஈட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்திய லாக்டவுனால் ஒட்டு மொத்த நாடும் முடங்கியது. நெருக்கடியான அந்த கால கட்டத்தை உத்தர பிரதேசம் சிறந்த பொருளாதார வாய்ப்பாக மாற்றியது. அம்மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சானிடைசர் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான விதிமுறைகளை தளர்த்தியது. இதனால் லாக்டவுன் காலத்தில் சானிடைசர் உற்பத்தி அதிகரித்தது மற்றும் அதன் சப்ளையிலும் தொய்வு ஏற்படவில்லை.

நெருக்கடியை வாய்ப்பாக மாற்றிய உத்தர பிரதேசம்…. லாக்டவுனில் சானிடைசர் தயாரிப்பில் ரூ.137 கோடி வருவாய்
லாக்டவுன் (கோப்புபடம்)

உத்தர பிரதேச கலால் துறையின் புள்ளிவிவரத்தின்படி, மார்ச் 24ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரையிலான காலத்தில் அம்மாநிலத்தில் உள்ள டிஸ்டில்லரிகள் மற்றும் சிறு தொழிற்சாலைகள் மொத்தம் 177 லட்சம் லிட்டர் சானிடைசர் உற்பத்தி செய்துள்ளன. இதில் மாநிலத்தின் உள்ளே 78.38 லட்சம் லிட்டர் சானிடைசர் விற்பனை செய்துள்ளது. 87.01 லட்சம் லிட்டர் சானிடைசரை வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்துள்ளது.

நெருக்கடியை வாய்ப்பாக மாற்றிய உத்தர பிரதேசம்…. லாக்டவுனில் சானிடைசர் தயாரிப்பில் ரூ.137 கோடி வருவாய்
சானிடைசர்

சானிடைசர் விற்பனை வாயிலாக மொத்தம் ரூ.137 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் ஜி.எஸ்.டி., உரிமம் கட்டணம் மற்றும் டிநேச்சுரலைசன் கட்டணங்களும் அடங்கும். உத்தர பிரதேச கலால் துறையின் கூடுதல் தலைமை செயலர் பூஸ்ரெட்டி கூறுகையில், சானிடைசர் உற்பத்தி விரைவாக நிறைவடைந்தது, மேலும் தயாரிப்புகள் உடனடியாக சந்தைகளில் கிடைத்தது என தெரிவித்தார். லாக்டவுன் தொடங்கியவுடன் மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை சானிடைசர் உற்பத்தி மற்றும் கிடைப்புக்கான விதிமுறையை தளர்த்தியது. ஜெனரல் ஸ்டோர்களும் சானிடைசர் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.