”அக்டோபரில் பயன்படுத்திய கார்கள் விற்பனை 10 % அதிகரிப்பு”

 

”அக்டோபரில் பயன்படுத்திய கார்கள் விற்பனை 10 % அதிகரிப்பு”

கடந்த அக்டோபரில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, அதன் காரணமாக நாட்டில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை கடும் பாதிப்புக்குள்ளானது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கார் விற்பனை சரிவிலிருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய கார்களுக்கான விற்பனை களைகட்டி உள்ள அதே நேரத்தில், பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனையும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

”அக்டோபரில் பயன்படுத்திய கார்கள் விற்பனை 10 % அதிகரிப்பு”

இது குறித்து மகிந்திராவின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆஷூடோஷ் பாண்டே கூறுகையில், கடந்த 2019ம் ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் பயன்படுத்திய கார்களுக்கான விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பருடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார். மேலும் பயன்படுத்திய கார்களை பொறுத்தவரை சில்லரை விற்பனைக்கு வரும் சில கார்கள் விற்பனைக்கு உகந்ததாக இல்லாத காரணத்தால், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை தான் சந்தையில் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

”அக்டோபரில் பயன்படுத்திய கார்கள் விற்பனை 10 % அதிகரிப்பு”

இதனிடையே கார்ஸ்24 நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் கஜேந்திரா ஜாங்கிட் கூறும்போது பொது முடக்கத்திற்கு பிறகு, பயன்படுத்திய கார்களை விற்பவரும் சரி வாங்குபவரும் சரி மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் செப்டம்பரை காட்டிலும் அக்டோபரில் கார் விற்பனை செய்ய முன்வருவோர் 10 சதவீத த்திற்கும் அதிகமாகி உள்ளதாக தெரிவித்தார்.

”அக்டோபரில் பயன்படுத்திய கார்கள் விற்பனை 10 % அதிகரிப்பு”

ஒஎல்எக்ஸ் ஆட்டோஸ் நிறுவனத்தின் தலைவர் அமித் குமார் கூறுகையில், முதல் முறை கார் வாங்குவோரில் 56 சதவீதத்தினர், பயன்படுத்திய கார்களை வாங்குவதையே விரும்புவதாக தெரிவித்தார். குறிப்பாக முதல்முறையாக கார் வாங்குவோர் ஹேட்ச்பேக் எனப்படும் சிறிய ரக கார்களை வாங்குவதையே விரும்புவதாக கூறிய அவர், 44 சதவீதம் பெரிய கார்களையும், அதில் 11 சதவீதம் எஸ்யுவி ரக கார்களையும் வாங்க விரும்புவதாக தெரிவித்தார்.

  • எஸ். முத்துக்குமார்