Home உலகம் ’அமெரிக்காவில் கொரோனா…” அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரீஸ் - மைக் பென்ஸ் விவாதம்

’அமெரிக்காவில் கொரோனா…” அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரீஸ் – மைக் பென்ஸ் விவாதம்

அமெரிக்க தேர்தல் களம் நாளுக்கு நாள் வெப்பம் ஏறிக்கொண்டே இருக்கிறது. கருத்து மோதல்கள் வலுவாகிகொண்டிருக்கிறது.

அடுத்த மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பைடன்.

துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். குடியரசுக் கட்சி சார்ப்பில் மைக் பென்ஸ் துணை அதிபராகப் போட்டியிடுகிறார்.

அதிபர் ட்ரம்ப் – ஜோ பைடன் நேருக்கு நேராக விவாதிக்கும் சென்ற மாதம் 29-ம் தேதி நடந்தது. அதில் காரசாரமான வாதங்கள் இருதரப்பிலும் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் துணை அதிபருக்குப் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாத்தில் இறங்கினார்கள். இந்த விவாத நிகழ்ச்சி மிகப் பாதுகாப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேட்பாளர் இருவர் மற்றும் நிகழ்ச்சியி நெறிப்படுத்துபவர் ஆகிய மூவருக்கும் போதுமான இடைவெளியும் கண்ணாடித் தடுப்பும் வைக்கப்பட்டிருந்தது.

குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் பென்ஸ், ‘நாடு பெரும் இப்போது கொரோனா எனும் மாபெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. இதிலிருந்து நிச்சயம் வெற்றிகரமாக மீள்வோம்’ என்றார்.

அதற்கான பதில் கமலா ஹாரீஸிடமிருந்து சூடான பதிலே வந்தது. “கொரோனாவை எதிர்கொள்ள ட்ரம்ப் அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை. அமெரிக்காவில் இதுவரை 70 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.

மைக் பென்ஸ் பேசுகையில், “அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளித்துள்ளோம். ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தால் இதற்கு ஆபத்து. வரிச்சலுகைகளையும் நீக்கி விடுவார். நம் நாட்டின் பாதுகாப்புதான் எல்லாவற்றையும் விட முக்கியம்” என்றார்.

கமலா ஹாரீஸோ, “ட்ரம்ப் எடுத்த பல முடிவுகளால் அமெரிக்க நாட்டின் பொருளாதாரமே சீர்க்குலைந்து விட்டது” எனக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மாற்றுத்திறனாளி கணவரை எரித்துக்கொன்ற பெண் கைது!

ராமநாதபுரம் ராமநாதபுரம் அருகே குடும்ப தகராறில் மாற்றுத்திறனாளி கணவரை தீவைத்து எரித்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அடுத்த...

விருப்பமனு அளித்தவர்களிடம் கமல், பழ.கருப்பையா நேர்காணல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றுகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதனிடையே,...

“மனநலம் பாதித்த ஒருவரின் செயல்…” : வீரமணி கண்டனம்!

தஞ்சை ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு அறிவிக்கப்பட்டதற்கு வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை...

14 மிமீ உயரத்தில் தங்க ‘டார்ச் லைட்’ சின்னம்… படைத்த தொண்டரை வாழ்த்திய கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த தொண்டர் மணிகண்டன். கைவினைக் கலைகளில் சிறப்புவாய்ந்தவரான இவர் 14 மிமீ உயரத்தில் கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை தங்கத்தில் வடிவமைத்திருக்கிறார். உலகிலேயே மிக...
TopTamilNews