அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு சிக்கல்! புதிய விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு

 

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு சிக்கல்! புதிய விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு

அமெரிக்காவில், ஆன்லைன் மூலமாக மட்டும் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்-1பி விசா முறையை சீர்திருத்தம் மற்றும் தகுதி அடிப்படையில் வழங்க வேண்டும் என்று தன்னுடைய நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த ஆண்டு இறுதி வரை எச்-1பி மற்றும் பிற பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். மிகவும் திறமையான தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதற்கும் சீர்திருத்த குடியேற்ற முறையை டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு சிக்கல்! புதிய விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு

இந்நிலையில் ஆன்லைனில் மட்டுமே கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் தங்களது நாடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் நேரடியான வகுப்புகள் என கலவையான முறையில் இயங்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த விசா கட்டுப்பாடுகள் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய மாணவர்கள் தான் அமெரிக்காவில் அதிகளவில் பயின்று வருகிறார்கள். கடந்த 2017, 2018 ஆம் ஆண்டுகளில், சுமார் இரண்டரை லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்கா சென்று பயின்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, சர்வதேச விமானப் போக்குவரத்து முடங்கி உள்ளதால் வெளிநாட்டு மாணவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதிலும் சிக்கல் இருக்கிறது.