இந்தியா மீது மீண்டும் குற்றம் சொல்லும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

 

இந்தியா மீது மீண்டும் குற்றம் சொல்லும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

அடுத்த மாதம் 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் கொரோனாவிலிருந்து சிகிச்சை பெற்ற வந்து ஓய்வுகூட எடுக்காமல் அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

இந்தியா மீது மீண்டும் குற்றம் சொல்லும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேருக்கு நேர் விவாதங்களில் கலந்துகொள்வது வழக்கம். அப்படி சில நாட்களுக்கு முன் நடந்த விவாததில் இந்தியா மீது குற்றம் சுமத்தினார் ட்ரம்ப்.

”தான் அதிபரானால் காலநிலை மாற்றம் குறித்த முக்கியமான செயற்பாடாக பாரீஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை இணைப்பேன்”என்றார் ஜோ பிடன்.

ஜோ பிடனின் கருத்துக்குப் பதில் சொல்லும் விதமாக ட்ரம்ப், ‘புவி வெப்பமயமாதலுக்கு ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளும் காரணம்’ என்றார்.

இந்தியா மீது மீண்டும் குற்றம் சொல்லும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

”உலகளவில் அமெரிக்காவில்தான் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனாவைத் தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது” என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார் ஜோ பிடன்.

அதற்கு அதிபர் ட்ரம்ப் பதிலளிக்கும்போது, ”இந்தியாவிலும் மரணம் அதிகம். இந்தியா கொரோனா மரணங்கள் பற்றிய சரியான விவரங்களை அளிக்க வில்லை” என்றார்.

இப்படி இந்தியா மீது குற்றம் சுமத்துவதை மீண்டும் தொடர்ந்துள்ளார். ’காற்று மாசுபடுவதற்கு முக்கியக்காரணமாக உள்ள நாடுகளின் பட்டியலைக் கூறினார் ட்ரம்ப். அவற்றில் இந்தியாவின் பெயரும் இடம்பெற்றிருந்ததுதான் ஆச்சர்யம். உலகளவில் நச்சுக்காற்றை அதிகம் வெளியிடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அழுத்தமாகக் குற்றம் சுமத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.