கொரோனா தடுப்பூசி – நவம்பரிலிருந்து ஏப்ரலுக்குத் தாவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

 

கொரோனா தடுப்பூசி – நவம்பரிலிருந்து ஏப்ரலுக்குத் தாவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

கொரோனா தடுப்பூசி பற்றிய புதிய காலக்கொடுவைக் கொடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது.  குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். 

கொரோனா தடுப்பூசி – நவம்பரிலிருந்து ஏப்ரலுக்குத் தாவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கத் தேர்தலில் டிரம்பின் கொரோனா கால நடவடிக்கைகள் முக்கியமான பேசுபொருளாக மாறிவிட்ட்டன. இவ்வளவு அலட்சியமாக பெருந்தொற்று நோயைக் கையாளலாமா? என்று டிரம்புக்கு எதிரான குரல்கள் ஒலிக்கின்றன. அதற்காக தேர்தலுக்கு ஓரிரு நாள் முன்பாவது கொரோனா தடுப்பூசியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் டிரம்ப்.

இந்நிலையில் தடுப்பூசி பற்றி டிரம்ப் பேசுவதில் நம்பகத்தன்மை இல்லை என்று துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் தெரிவித்திருந்தார்.

கொரோனா தடுப்பு மருந்து மூன்று அல்லது நான்கு வாரத்தில் வந்துவிடும் என ட்ரம்ப் சில நாட்களுக்கு முன் நடந்த பரப்புரை கூட்டத்தில் தெரிவித்திருந்தார். அதாவது எப்படியும் நவம்பரில் வந்துவிடும் என்பதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

கொரோனா தடுப்பூசி – நவம்பரிலிருந்து ஏப்ரலுக்குத் தாவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இப்போது நேற்று பேசிய ட்ரம்ப், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா தீவிரமாக இருப்பதாகத் தெரிவித்தவர்,  அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி எனும் விதத்தில் தயாரிப்பு நடக்கிறது’ என்று கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால் ட்ரம்ப் அடிக்கடி அது குறித்து அதிகம் பேசி வருகிறார். அதனாலேயே எதிர்கட்சியினர் ட்ரம்ப் பேச்சை நம்பவேண்டாம் என்று தொடக்கம் முதலே கூறிவருகின்றன.