‘அவர் பேச்சைக் கேடிருந்தால் 8 லட்சம் பேர் செத்திருப்பார்கள்!’ அமெரிக்க அதிபர் சொல்வது யாரை?

‘அவர் பேச்சைக் கேடிருந்தால் 8 லட்சம் பேர் செத்திருப்பார்கள்!’ அமெரிக்க அதிபர் சொல்வது யாரை?

கொரோனாவின் தாக்கமும் பாதிப்பும் இறப்பும் அதிகம் உள்ள நாடு அமெரிக்கா. அங்கு இன்றுவரை புதிய கொரோனா நோயாளிகள் குறைவதில் பெரியளவு எண்ணிக்கை மாற்றமில்லை.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 84,56,653. இவர்களில் சிகிச்சையால் குணமடைந்தவர்கள் 55,03,268 பேர். மரணமடைந்தவர்கள் 2,25,222 பேர். நேற்று மட்டுமே அமெரிக்காவில் 57,327 பேர் புதிய நோயாளிகளாக உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.  

‘அவர் பேச்சைக் கேடிருந்தால் 8 லட்சம் பேர் செத்திருப்பார்கள்!’ அமெரிக்க அதிபர் சொல்வது யாரை?

அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பெரும் விவாதமாகி இருக்கிறது. நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசியைக் கொண்டுவர ட்ரம்ப் எடுத்த முயற்சிகள் வெற்றி அளிக்க வில்லை.

அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவிக்குமே கொரோனா தாக்கியது. சிகிச்சை முடிந்து மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு வருகிறார் ட்ரம்ப்.

‘அவர் பேச்சைக் கேடிருந்தால் 8 லட்சம் பேர் செத்திருப்பார்கள்!’ அமெரிக்க அதிபர் சொல்வது யாரை?

Anthony Fauci

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் அதிபர் ட்ரம்ப். ஜனநாயக் கட்சியின் சார்பாக அதிபருக்குப் போட்டியிடுபவர் ஜோ பைடன். ஜனநாயக் கட்சியின் செனட்டர் அலெக்ஸாண்டர் தேர்தல் பிரசாரத்தின்போது, ட்ரம்ப் அரசு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் காட்டிய மெத்தனத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். மேலும், ஆண்டனி பெஹ்சியின் ஆலோசனைகளை ட்ரம்ப் பின்பற்றீருந்தால், அமெரிக்காவில் கொரோனா கட்டுக்குள் இருந்திருக்கும். இறப்பும் குறைவாக இருந்திருக்கும்’ என்று பேசியிருந்தார்.

அலெக்ஸாண்டர் பேசிய இந்தக் கருத்து ஊடகங்களில் விவாதப் பொருளானது. ஏனெனில், ஆண்டனி பெஹ்சி மிகவும் மூத்த ஆராய்ச்சியாளர். அமெரிக்காவின் கொரோனா தடுப்புக் குழுவின் உறுப்பினர். மேக்ஸ்வெல் பின்லாந்து. லேஸ்கர் விருது உள்ளிட்ட பல்வேறு சர்வேத விருதுகளைப்  பெற்றவர்.

‘அவர் பேச்சைக் கேடிருந்தால் 8 லட்சம் பேர் செத்திருப்பார்கள்!’ அமெரிக்க அதிபர் சொல்வது யாரை?

அலெக்ஸாண்டர் கூறிய கருத்துக்குப் பதில் சொல்லும் விதமாக ட்ரம்ப் பேசும்போது, “ஆண்டனி பெஹ்சி உள்ளிட்ட தடுப்பு குழுவில் உள்ளா முட்டாள்களின் பேச்சைக் கேட்க மக்கள் தயாராக இல்லை. அவர்களின் பேச்சைக் கேட்டிருந்தால் 7 முதல் 8 லட்சம் பேரை கொரோனாவில் இறக்கக் கொடுத்திருப்போம்” என்று பேசினார்.

உலகின் மிக முக்கிய ஆராய்ச்சியாளரை முட்டாள் என ட்ரம்ப் சொல்லியிருப்பதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.