அமெரிக்காவிலும் களைகட்டிய ராமர் கோயில் பூமிபூஜை கொண்டாட்டங்கள்!

 

அமெரிக்காவிலும் களைகட்டிய ராமர் கோயில் பூமிபூஜை கொண்டாட்டங்கள்!

அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜை விழாவை அமெரிக்காவிலும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர் அங்குள்ள இந்தியர்கள்.

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 200 மத தலைவர்களுக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அங்கு கோயில் வளாகத்திற்கு சென்ற பிரதமர் மோடி மரக்கன்றை நட்டார். தனிமனித இடைவெளியுடன் நடந்த இந்த நிகழ்வுகளின் போது பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ராமர் கோயில் கட்.டுவதற்கான பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டிய நிலையில், அமெரிக்காவில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன. வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் பெரிய டிஜிட்டல் திரையில் ராமரின் உருவப்படங்களை அமெரிக்க இந்தியர்கள் காட்சிப்படுத்தினர். ராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்பதால் அதனை சிறப்பாக கொண்டாடுவதாக அவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி திரையின் முன் திரண்ட இந்திய வம்சாவளிகள் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என்ற நாமத்தையும் முழங்கினர்.