கள்ள ஓட்டு… நாட்டைச் சீனா கைப்பற்றும்… எதிரணியை விளாசும் ட்ரம்ப் #AmericaElection

 

கள்ள ஓட்டு… நாட்டைச் சீனா கைப்பற்றும்… எதிரணியை விளாசும் ட்ரம்ப் #AmericaElection

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. பிரசாரக் கூட்டங்களில் எதிரணியைத் திணறடிக்கும் வாதங்களை முன் வைக்கின்றன இரு தரப்புமே.

இன்னும் இரு மாதங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் எவ்வாறு நடத்தப்படும் என்பதில் கடும் குழப்பம் நிலவுகிறது.

கள்ள ஓட்டு… நாட்டைச் சீனா கைப்பற்றும்… எதிரணியை விளாசும் ட்ரம்ப் #AmericaElection

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். 

தற்போதைய அதிபர் ட்ரெம்பின் செயல்பாடுகள் குறித்து, ஜோ பிடனும் கமலா ஹாரீஸூம் ஏராளமான செய்திகளைக் குறிப்பிட்டு பேசுகின்றனர். குறிப்பாக, கொரோனாவை ட்ரம்ப் கையாண்டுவரும் முறை குறித்து கடும் விமர்சனத்தை முன் வைக்கின்றனர்.  

கள்ள ஓட்டு… நாட்டைச் சீனா கைப்பற்றும்… எதிரணியை விளாசும் ட்ரம்ப் #AmericaElection

ஆனால், ட்ரம்ப் அவற்றிற்குப் பதில் சொல்வதற்கு பதில் வண்டியை வேறு பக்கம் திருப்புகிறார். நேற்றையை கூட்டத்தில் ட்ரம்ப் பேசியபோது, “நம் நாட்டு உளவுத்துறையின் அறிக்கைகளை நன்கு கவனியுங்கள்.

ஜோ பிடன் இந்தத் தேர்தலில் வென்று அமெரிக்க அதிபராக வேண்டும் என சீனா ஆசைப்படுகிறது. அப்படியெனில், அவர் வரும் நவம்பரில் வென்று அதிபரானால் அமெரிக்காவை சீனர்கள் கைப்பற்றிவிடுவார்கள்’ என்று கூறியிருக்கிறார்.

மேலும், “ அமெரிக்க தேர்தல் முறையைப் பற்றி எதிரணியினர் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவேளை எதிரணி வெல்ல வேண்டும் எனில் கள்ள ஓட்டுகளால் மட்டுமே முடியும். ஆனால், நாம்தான் நிச்சயம் வெற்றிபெறுவோம்’ என்றும் சூளுரைத்திருக்கிறார்.

கள்ள ஓட்டு… நாட்டைச் சீனா கைப்பற்றும்… எதிரணியை விளாசும் ட்ரம்ப் #AmericaElection

ட்ரம்ப் தனது பிரசாரத்தின் தொடக்கம் முதலே, ஜோ பிடனை சீன ஆதரவாளர் எனும் முத்திரை குத்துவதில் குறியாக இருக்கிறார். மேலும் கமலா ஹாரீஸின் குடியுரிமை குறித்து சந்தேகம் எழுப்பியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தேசப் பக்தியை முன்னிருத்தியே சென்ற முறை ட்ரம்ப் தேர்தல் அணுகுமுறையை வகுத்துக்கொண்டார். அதையே இம்முறையும் தொடர்கிறார்.