இந்தியாவில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு…பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய அமெரிக்கா!

இந்தியாவில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு…பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய அமெரிக்கா!

இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தது. தினந்தோறும் கிட்டத்தட்ட 4 லட்சம் கேஸ்கள் உறுதிசெய்யப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு உலக நாடுகள் இந்தியர்கள் உள்ளே நுழையவும், தங்கள் நாட்டு மக்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. குறிப்பாக விமானப் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தி வைத்தன.

இந்தியாவில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு…பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய அமெரிக்கா!

நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடைவிதித்தன. உத்தரவை மீறி வேறு வழிகளில் வருபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா எச்சரித்திருந்தது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பான பயண அறிவுரையை வழங்கியது. அந்த சமயம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் நான்காம் நிலை கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்தியாவில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு…பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய அமெரிக்கா!

இதன்படி எக்காரணம் கொண்டும் இந்தியாவுக்கு செல்லவே கூடாது என பரிந்துரைக்கப்பட்டது.
இச்சூழலில் இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்தியா செல்வதற்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகளுக்கு தற்போது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. நான்காம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்கு குறைத்துள்ளது. மூன்றாம் நிலையைப் பொறுத்தவரை இந்தியாவுக்குச் செல்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் என்பதைக் குறிக்கக் கூடியது. இதன் பொருள் நன்கு யோசித்துவிட்டு பயணம் செய்யலாமா வேண்டாமா என முடிவெடுங்கள் என்பதாகும்.