Home க்ரைம் சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா டாலர் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா டாலர் பறிமுதல்

கொரொனா தொற்று அதிகரித்து வரும் இந்தச் சூழலைக் கடத்தல் காரர்களும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் ஓரிரு மாதங்களாக தங்கம், கரன்சி கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. சமீபத்தில் இது அதிகரித்திருக்கிறது.

இந்தியாவிலிருந்து வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு முக்கியமான தகவல் கிடைத்தது. அதனால் உஷாரான சுங்கத்துரையினர், சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபிளைட் ஐஎக்ஸ் 1643 விமானத்தில் பயணம் செய்யவிருந்த சென்னையைச் சேர்ந்த சையது அலி (26) என்பவரை புறப்பாடு முனையத்தில் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தினர்.


பிடிபட்ட சையது அலியைச் சோதனை செய்ததில், அவரது உள்ளாடையில் 3 பொட்டலங்கள் மறைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பொட்டலங்களைப் பிரித்து பார்க்கையில் 15600 அமெரிக்க டாலர்கள் இருந்தன. அதனை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவரது கைப்பையில் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3000 அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூபாய் 13.7 லட்சம் மதிப்பிலான 100 அமெரிக்க டாலர் நோட்டுக்களாக 18600 அமெரிக்க டாலர்கள் சுங்கச் சட்டம் 1962ன் கீழ் அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்… நாட்டுக்கு அவசியம்… மோடி வலியுறுத்தல்

ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது நாட்டுக்கு அவசியம் என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற...

40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பாலாற்றில் 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் சுமார் 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“மயக்க மருந்து ,பின்னர் பலருக்கு விருந்து” -தோழி வீட்டில் “டீ” குடித்ததால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை .

சமூக ஊடகத்தில் அறிமுகமான பெண்ணால் கடத்தப்பட்டு, பலருக்கு விற்கப்பட்டு பலாத்கார கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதையை கேட்டால் கண்ணீர் வரும் .

நீங்க வேணும்னா தூக்கி நிறுத்திப்பாருங்க…அப்போ தெரியும்.. சவால் விட்ட முதல்வர்!

’’சுவிட்ச் போட்ட உடனே எல்லாம் சரியாகிடுமா? ரிமோட் பட்டனை அழுத்தின உடனே சரியாகிடுமா என்ன? மின்சாரம் ரொம்ப ஆபத்தானது. ஒவ்வொரு உயிரும் ரொம்ப முக்கியமானது. ஒவ்வொன்றாகத்தான் பார்க்க முடியும். நீங்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!