அமெரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்படலாம்! – மருத்துவர்கள் எச்சரிக்கை

அமெரிக்க மக்கள் தொடர்ந்து கொரோனா தடுப்பு முறைகளைப் பின்பற்றாமல் நடந்துவந்தால் விரைவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்படும் அளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரக்கைவிடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்தாலும் மிகப்பெரிய அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் கொரோனா பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் இல்லை. இதனால் பலரும் வெளியே ஊர் சுற்றுவது, மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பது என்று பல்வேறு இருந்து வருகின்றனர்.

இது குறித்து அமெரிக்காவின் மருத்துவர் ஆன்டனி ஃபியூசி அமெரிக்காவின் சுகாதாரம், கல்வி, தொழிலாளர் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான செனட் கூட்டத்தில் பேசும்போது, “அமெரிக்காவில் தற்போது ஒரு நாளைக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாசிடிவ் நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்படும் நிலை விரைவில் வரும்.

தற்போது நடந்து வரும் தடுப்பு முறைகளில் திருப்தி இல்லை. தவறான பாதையில் நடந்து வருகிறோம். புதிய நோயாளிகள் எண்ணிக்கை வரைபடத்தை கவனித்தால் கொரோனாவைக் கட்டுப்படுத்த சரியான, உடனடி நடவடிக்கையை நாம் எடுக்கவில்லை என்று தெரிகிறது. மொத்தத்தில் கொரோனா தற்போது நம்முடைய கட்டுக்குள் இல்லை. நிச்சயமாக மிக மோசமான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இதை நாம் தடுக்காவிட்டால் மிகப்பெரிய பிரச்னைகள், வேதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார்.
அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 26 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

Most Popular

`குளிக்கச் சென்றவர் சடலமாக கிடந்தார்!’- திருமணமான 45வது நாளில் இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்

திருமணமான 45-வது நாளில் குளிக்கச் சென்ற இளம்பெண் குளியலறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் டவுன் பகுதியைச்...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மதிப்பும், மரியாதையும் கூடும்!

இன்றைய ராசிபலன்கள் 06-07-2020  (திங்கட்கிழமை) நல்லநேரம் காலை 6.15 முதல் 7.15 வரை மாலை 4.45 முதல் 5.45 வரை ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை மேஷம் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆதரவும்...

அடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக மன கசப்பு இருந்து வந்தது. தற்போது...

மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்… காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் லோதி பா.ஜ.க.வில் ஐக்கியம்..

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நேரம் சரியில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உட்கட்சி சண்டையால், 18 ஆண்டுகளாக அந்த கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அந்த கட்சியிலிருந்து...
Open

ttn

Close