Home உலகம் அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 288 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 288 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க்: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை ஒரு கோடியே 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 55 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், மெக்சிகோ ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

usa

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 125,768 ஆக உள்ளது. உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது நான்கில் ஒரு பங்காகும். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் 2,500,419-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கல் குவாரி அமைக்க எதிர்ப்பு… தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…

தூத்துக்குடி ஶ்ரீவைகுண்டம் அருகே கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவுடன் மமக, முஸ்லீம் லீக் தொகுதி பங்கீடு கையெழுத்தானது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பாக திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், மமகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு...

கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்ட்

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கன ரணாவத், இந்தி பாடலாரிசியர் ஜாவித் அக்பர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியின் பாதுகாப்பை அதிகரிப்பது எப்படி?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்ல, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியை எப்படி இயற்கையான ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது...
TopTamilNews