சீனாவின் ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் தயாராகும் பொருட்களுக்கு அமெரிக்கா தடை!

 

சீனாவின் ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் தயாராகும் பொருட்களுக்கு அமெரிக்கா தடை!

ஏற்றுமதியில் உலகளவில் முதன்மையான நாடுகளில் ஒன்று சீனா. ஆனால், சீனாவுடன் எப்போதுமே மோதிக்கொண்டிருக்கும் நாடும் அமெரிக்கா.

தற்போது அமெரிக்கத் தேர்தலில்கூட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடனை சீன ஆதரவாளர் என்றே குற்றம் சாட்டி வருகிறார். அந்தளவுக்கு சீனா மீது அதிருப்தி கொண்டிருக்கிறது அமெரிக்கா.

சீனாவின் சில பொருட்களுக்கு அமெரிக்கா தடைவிதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சீனாவின் ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் தயாராகும் பொருட்களுக்கு அமெரிக்கா தடை!

சீன நாட்டின் ஷின்ஜியாங் மாகாணத்தில் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக பருத்தி அதிகளவில் அங்கிருந்துதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், அமெரிக்கா இந்த மாகாணத்தில் தயாரிக்கப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதித்து விட்டது.

காரணம், ஷின்ஜியாங் மாகாணத்தில் சட்டத்திற்கு விரோதமாக சுமார் 10 லட்சம் பேர் அடைக்கப்பட்டு அல்லது சிறை வைப்பட்டு கட்டாயப்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்ய வைக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்கா கூறியுள்ளது. உழைப்புக்கான ஊதியம் அளிக்கப்பட்டாமல் உழைப்பு சுரண்டப்பட்டு பொருள்களைத் தயாரிக்க வைக்க கட்டாயப்படுத்தப்படுகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

சீனாவின் ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் தயாராகும் பொருட்களுக்கு அமெரிக்கா தடை!

அதிலும் குறிப்பாக வீகர் இன இஸ்லாமியர்கள் ஷின்ஜியாங் மாகாணத்தில் சிறை வைக்கப்பட்டிக்கிறார்களாம். அது மனித விரோத செயல் என அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

கணிப்பொறி உதிரி பாகங்கள், பெட்ரோலிய கெமிக்கல்ஸ், பருத்தி தொடர்பான பொருட்கள் என இங்கு தயாரிக்கப்படும் சிலவற்றிற்கு அமெரிக்கா இறக்குமதி தடை விதித்திருக்கிறது.

சீனாவிலிருந்து இப்பொருட்கள் இறக்குமதியால் அமெரிக்காவின் உள்நாட்டு பொருள் உற்பத்தியில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தேக்கத்தைச் சரி செய்யவும் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.