ரெம்டெசிவிர் மருந்துக்கு அமெரிக்கா அனுமதி!

 

ரெம்டெசிவிர் மருந்துக்கு அமெரிக்கா அனுமதி!

கொரோனாவால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடு அமெரிக்கா. கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 86,61,651 பேர் பாதிக்கப்பட்டு முதல் இடத்தில் உள்ளது.

நேற்று, அமெரிக்காவில் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளவர்கள் 74,301 பேர். அமெரிக்காவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விடவும் அதிகளவில் உள்ளது. நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்காவில்தான் அதிகம். நேற்று மட்டும் இறந்தோர் 973 பேர்.

ரெம்டெசிவிர் மருந்துக்கு அமெரிக்கா அனுமதி!

கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தை அமெரிக்க மருந்து கட்டுப்பாடு துறை அனுமதி அளித்திருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துமனையில் கவனிக்கத் தக்க நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து சிகிச்சை அளிக்கப்படுமாம். அதிலும் 12 வயதுக்கு மேற்பட்டவராக அந்நோயாளி இருக்க வேண்டும். மேலும் எடையும் குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது அமெரிக்கா.

ரெம்டெசிவிர் மருந்துக்கு அமெரிக்கா அனுமதி!

மே மாத வாக்கிலேயெ ரெம்டெசிவிர் மருந்தை சிகிச்சை அளிக்க அமெரிக்கா அனுமதி அளித்திருந்த போதிலும் அது ஒரு பரிசோதனை எனும் அளவில்தான் இருந்தது. தற்போது ரெம்டெசிவிர் மருந்தை சிகிச்சை அளிக்க முழு அனுமதியை அமெரிக்க அரசு அளித்துள்ளது.