பைசர் கொரோனா தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா அனுமதி… ஆனால்?

 

பைசர் கொரோனா தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா அனுமதி… ஆனால்?

உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது கொரோனா நோய்ப் பரவல். நாளுக்கு நாள் கொரோனாவின் புதிய நோயாளிகள் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 7 லட்சத்து 20 ஆயிரத்து 438 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 91 லட்சத்து 48 ஆயிரத்து 966 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 15 லட்சத்து 88 ஆயிரத்து 438 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,99,83,408 பேர்.

பைசர் கொரோனா தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா அனுமதி… ஆனால்?

உலகளவில் அதிக கொரோனா நோயாளிகள் உள்ள நாடு அமெரிக்கா. அதிலும் சமீப நாட்களாக தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமான நோ
யாளிகள் அதிகரித்து வருகின்றன. தினமும் 2500க்கும் மேற்பட்டோர் இறந்தும் வருகின்றனர். அதனால், முதலில் கொரோனா தடுப்பூசி தேவைப்படும் நாடு அமெரிக்காதான்.

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 95 சதவிகித பலன் அளிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், பிரிட்டன் தனது நாட்டில் பொதுமக்களுக்கு அந்தத் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளித்துவிட்டது.

பைசர் கொரோனா தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா அனுமதி… ஆனால்?

இந்நிலையில் அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போதைக்கு பொதுமக்களுக்கு அளிக்க அனுமதி இல்லை. அவசர காலப்பயன்பாட்டுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது, 16 வயதுக்கு அதிகமானவர்களுக்கு இந்தத் தடுப்பூசி அவசரக்காலப் பயன்பாட்டுக்குச் செலுத்தப்படும்.