நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி…. சிவ சேனா முடிவால் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவு

 

நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி…. சிவ சேனா முடிவால் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவு

மகாராஷ்டிராவில் கவர்னர் ஒதுக்கீட்டில் நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்க சிவ சேனா முடிவு செய்துள்ளது. இது சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசில் இணைந்தார். மேலும் அந்த தேர்தலிலும் போட்டியிட்டார் ஆனால் பா.ஜ.க. வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் தோல்வி அடைந்தார். அதன் பிறகு உட்கட்சி பூசல் மற்றும் பிரிவினைவாதத்தை மேற்கோள்காட்டி காங்கிரசிலிருந்து விலகினார். அரசியலிருந்து விலகியே இருந்தார். இந்த சூழ்நிலையில், நடிகை கங்கனா ரனாவுத்துக்கும், சிவ சேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத்துக்கும் இடையிலான மோதல் நடந்து கொண்டு இருந்தபோது, கங்கனாவுக்கு எதிராக ஊர்மிளா கருத்து தெரிவித்தார்.

நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி…. சிவ சேனா முடிவால் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவு
நடிகை ஊர்மிளா மடோன்கர்

கங்கனாவை அழும் குழந்தை என்றும், அவர் தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்து போராட வேண்டும் என்று ஊர்மிளா கருத்து தெரிவித்தார். இதனையடுத்து ஊர்மிளாவை ஒரு போராளியாகவும், மகாராஷ்டிராவின் பெருமையின் சின்னமாகவும் சிவ சேனா பார்த்தது. மராத்தி மனூஸ் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க மற்றும் 2022ல் பி.எம்.சி. தேர்தலுக்கு முன்பாக மராத்தி பேசாத மக்களிடம் தங்களது கட்சியை பரப்ப ஊர்மிளாவை பயன்படுத்தி கொள்ளலாம் என்று சிவ சேனா கணக்கு போட்டது.

நடிகை ஊர்மிளாவுக்கு மேலவை உறுப்பினர் பதவி…. சிவ சேனா முடிவால் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு பின்னடைவு
காங்கிரஸ்

இதன் விளைவாக மகாராஷ்டிராவில் மேலவை உறுப்பினர் பதவியை ஊர்மிளாவுக்கு வழங்க சிவ சேனா முடிவு எடுத்துள்ளது. இதனை சஞ்சய் ரவுத்தும் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கவர்னர் ஒதுக்கீட்டில் மேலவை உறுப்பினர் பதவியை ஊர்மிளாவுக்கு வழங்க கட்சி முடிவு செய்துள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரேவும் இது தொடர்பாக ஊர்மிளாவிடம் பேசினார். அப்போது சிவ சேனாவின் மேலவை உறுப்பினர் வேட்பாளராக ஊர்மிளா ஒப்புக்கொண்டார் என தெரிவித்தார். தனது கட்சியிலிருந்து வெளியேறிய ஊர்மிளாவுக்கு சிவ சேனா மேலவை உறுப்பினர் பதவி வழங்குவது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.