கட்சி பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு தூக்கி கொடுத்த நடிகை ஊர்மிளா…. புலம்பும் காங்கிரஸ்

 

கட்சி பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு தூக்கி கொடுத்த நடிகை ஊர்மிளா…. புலம்பும் காங்கிரஸ்

2019 நாடாளுமன்ற தேர்தல் செலவுக்காக காங்கிரஸ் கட்சி வழங்கிய பணத்தில் ரூ.20 லட்சத்தை நடிகை ஊர்மிளா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார். அது கட்சி பணம் கட்சியிடம்தான் திரும்பி கொடுத்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரசில் இணைந்தார். மேலும் அந்த தேர்தலில் மும்பை நார்த் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார். ஆனால் பா.ஜ.க. வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் தோல்வி கண்டார். அதன் பின் சில மாதங்கள் அரசியலிருந்து ஒதுங்கி இருந்தார். பின் திடீரென காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில் கடந்த மாதம் திடீரென சிவ சேனா கட்சியில் இணைந்தார்.

கட்சி பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு தூக்கி கொடுத்த நடிகை ஊர்மிளா…. புலம்பும் காங்கிரஸ்
ஊர்மிளா மடோன்கர்

கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தேர்தல் செலவுகளுக்காக காங்கிரஸ் கொடுத்த பணத்தில் ரூ.20 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு ஊர்மிளா வழங்கியுள்ளார். தற்போது இந்த விவகாரம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது, தேர்தல் செலவுக்காக காங்கிரஸ் கட்சி ஊர்மிளாவுக்கு மொத்தம் ரூ.50 லட்சம் வழங்கியது. தேர்தல் விதிமுறையின்படி, பொதுத்துறை வங்கியில் காங்கிரஸ் பொது செயலாளர் அசோக் சூத்திரலேவுடன் இணைந்து ஒரு கூட்டு கணக்கை தொடங்கினார். அந்த கணக்கில்தான் காங்கிரஸ் அந்த பணத்தை போட்டது. அந்த பணத்திலிருந்து ஊர்மிளா சுமார் ரூ.30 லட்சத்தை தேர்தல் சமயத்தில் செலவிட்டுள்ளார்.

கட்சி பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு தூக்கி கொடுத்த நடிகை ஊர்மிளா…. புலம்பும் காங்கிரஸ்
காங்கிரஸ்

எஞ்சிய சுமார் ரூ.20 லட்சத்தை கடந்த ஜூலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி விட்டார். தற்போது அந்த பணம் கட்சிக்கு சொந்தமானது கட்சியிடம் அவர் திரும்ப கொடுத்து இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் திருப்பி கேட்கிறது. இது தொடர்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் பொருளாளர் சுரேஷ் ஷெட்டி கூறுகையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளருக்கு கட்சி பணம் கொடுத்தது. அந்த பணம் கட்சிக்கு சொந்தமானது. பணம் மீதம் இருந்தால் அதனை கட்சியிடம் திரும்ப அளிக்க வேண்டும். வழக்கான நடைமுறையின்படி, இந்த விஷயத்திலும் இது நடந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஊர்மிளா இது குறித்து கூறுகையில், மகாராஷ்டிரா காங்கிரஸ் பிரிவு தலைவர் பாலாசாகேப் தோரத்தின் அனுமதியுடன் அந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினேன் என்று தெரிவித்தார். ஆனால் பாலாசாகேப் தோரத் கூறுகையில், ஒரு முறை பேசும்போது, அந்த தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்ததாக என்னிடம் தெரிவித்தார் என்று கூறினார்.